வயதானலும் இளமையாேடு இருக்க..ஜப்பானியர்கள் பின்பற்றும் 7 ட்ரிக்ஸ்!

ஜப்பானியர்களை கவனித்ததுண்டா? அவர்கள் வயதானலும், அவர்களுக்கு வயதாகாதது போன்ற தோற்றம் இருக்கும். அது எப்படி தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2024, 05:20 PM IST
  • நீண்ட நாள் வாழ ஜப்பானியர்கள் செய்வது
  • ஹெல்தியான பழக்கங்கள்
  • இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
வயதானலும் இளமையாேடு இருக்க..ஜப்பானியர்கள் பின்பற்றும் 7 ட்ரிக்ஸ்!  title=

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள், வயதிலும் சரி, பார்க்கவும் குறிப்பிட்ட வயது வரை இளமையாக இருப்பார்கள். இப்படி அவர்கள் இருப்பதற்கு காரணம், அவர்களின் கலாச்சார பண்பாடுகளும், உணவு பழக்கங்களும் என்பதை தாண்டி அவர்கள் பின்பற்ரும் சில வாழ்வியல் முறைகளும்தான். இவர்களின் நீண்ட வாழ்வதற்கு இவர்களிடம் இருந்து நாம் கடன் வாங்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

1.டயட் பழக்கம்:

சீனாவை சேர்ந்தவர்களின் டயட்டில் பதப்படுத்தப்பட்ட பொருட்களோ, சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களோ மிகவும் குறைவாகவே இருக்கும். அதற்கு மாறாக காய்கறிகள், கடல்வாழ் உயிரினங்கள், சோயா வகை உணவுகள், ரைஸ் உள்ளிட்டவைதான் அதிகமாக இருக்கும். இவர்கள் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலும் ஒமேகா 2 ஃபேட்டி அமிலங்கள் இருக்கும் உணவுகளும் அதிகமாக இருக்குமாம்.

2.கிரீன் டீ:

ஜப்பானியர்கள் பலர் கிரீன் டீயை தினமும் குடிப்பதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்து அவர்கள் தப்பித்து கொள்வதாக கூறாப்படுகிறது. மேலும், தினசரி கிரீன் டீ குடிப்பது, சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவுமாம். 

3.பகுதி சாப்பாடு:

சீனர்கள், அவர்கள் வயிற் 80 சதவிகிதம் நிரம்பும் வரை மட்டுமே சாப்பிடுவார்களாம். இதனால், அதிக எடை கூடுவது மற்றும் அதிகமாக சாப்பிடுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து இவர்கள் தப்பிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படி வயிறு நிறைய இவர்கள் சாப்பிடாமல் இருப்பதால், வயது சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்தும் அவர்கள் தப்பிப்பதாக கூறப்படுகிறது. 

4.உடற்பயிற்சி:

தங்களின் உடல் நலனில் அக்கறை கொண்ட சீனர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யவும் தவற மாட்டார்களாம். சொல்லப்போனால் தினமும் சாப்பிடுவது, நடப்பது போல உடற்பயிற்சி செய்வதும் இவர்களின் நடவடிக்கைகளில் ஒன்று என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இவர்களில் பெரும்பாலானோர் தற்காப்பு கலை மற்றும் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்கின்றனர். இது உடற்பயிற்சிக்கு நல்ல மாற்றாக அமைகிறது.

மேலும் படிக்க | 100 வயதை கடந்து வாழ ஜப்பானியர்கள் செய்யும் 6 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?

5.சரும பளபளபுக்கு:

சீனர்களின் சருமம் பார்ப்பதற்கு கண்ணாடி போல இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் நாட்டின் கால நிலை என்றாலும் இவர்கள் அதற்கென எடுத்துக்கொள்ளும் தனி அக்கறையும் பெரும் பங்கு வகிக்கிறது. வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள, நீர்ச்சத்துடன் வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். கடற்பாசி, கிரீன் டீ, அரிசி மாவை முகத்திற்கு பூசுதல் போன்ற விஷயங்களை இவர்கள் செய்கின்றனர். இதனால் இவர்களின் சருமம் என்றும் இளமை மாறாமல் அழகாக இருப்பதாக கூறப்படுகிறது.

6.தண்ணீர் குடிக்க வேண்டும்:

நம்மில் பலர் அதிகம் செய்யும் தவறு, உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது. நம் சருமத்தை இளமை மாறாமல் வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நேரத்திற்கு சரியாக தண்ணீர் குடிப்பதுதான். இப்படி உடலில் நீர்சத்தினை தக்கவைத்து கொள்வதால், நமது சருமம் பளபளக்கும் என மருத்துவர்களே கூறுகின்றனர். 

7.மன பதற்றத்தை நீக்கும் நடவடிக்கைகள்:

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ, சரியாக சாப்பிட்டாலோ உடற்பயிற்சி செய்தாலோ மட்டும் போதாது. கண்டிப்பாக மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மனதை ரிலாக்ஸ் செய்யும் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் பல நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் படிக்க | எடை குறைய இப்படி செஞ்சு பாருங்க: ஜப்பானியர்களின் வெயிட் லாஸ் ரகசியம் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News