உடற்பயிற்சி செய்தபின் சாலட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதில் நார்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சி செய்தபின் செரிமான பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்கிறது, அதனால் உணவை உடனடியாக எடுப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக வாழைப்பழம் மற்றும் புரோட்டீன் பவுடர் கலந்த ஸ்மூத்திகளை சாப்பிடலாம்.
மேலும் படிக்க | தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்..
60 முதல் 90 நிமிடங்களுக்கு குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க் தேவைப்படாது. பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் ட்ரிங்குகளில் செயற்கையான சர்க்கரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மேலும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கிளைகோஜனை நிரப்பவும் சீரான சிற்றுண்டி அல்லது தண்ணீர் குடிப்பது போதுமானது.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பது அவசியமானது, உடற்பயிற்சி செய்யும் போது, வியர்வை மூலம் திரவங்கள் இழக்கப்படுகின்றன. அதனை ஈடுசெய்ய நாம் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் நீர்சத்து கம்மியாக இருந்தால் தலைவலி, சோர்வு, தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும்.
உடற்பயிற்சிக்குப் பிறகு குறைந்தபட்சம் 2 கப் நீரும், தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால்,கூடுதல் திரவங்கள் அல்லது எலக்ட்ரோலைட்டுகள் தேவைப்படலாம்
கார்ப்ஸ் நமது உடலின் முதன்மை எரிபொருள் மூலமாகும், உடற்பயிற்சிக்குப் பிறகு அது தேவைப்படுகிறது, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் கலவையானது கிளைகோஜன்களை நிரப்புவதன் மூலம், தசையை உருவாக்க மற்றும் சரிசெய்யும் மீட்பு செயல்முறைக்கு உதவும், தண்ணீரில் கலந்துள்ள புரோட்டீன் ஷேக்கைக் குடிப்பதற்குப் பதிலாக, பழத்துடன் அதிக புரதம் கொண்ட ஸ்மூத்தியை சாப்பிடலாம்.
எடையை பராமரிக்க அல்லது எடையை குறைக்க உடற்பயிற்சி அவசியம் தான், ஆனால் உடலுக்கு தேவையான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். உணவு உண்பது மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைப்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்செய்கிறது.
மேலும் படிக்க | ஃபிட்டாக இருக்கணுமா, காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR