கருவளையம் என்பது காதல் போல, ஆண்-பெண் என பாலின வேறுபாடு காட்டாமல் அனைவரின் கண்களுக்கு கீழும் வந்துவிடும். இவை சைலண்டாக வந்தாலும், நம் முகம் பொலிவிழந்து காணப்பட பெரிய காரணமாக இருக்கும். தினசரி வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல, பல திரை நட்சத்திரங்களும் கருவளையத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவளையம் எதனால் வருகிறது..? இதை சரிசெய்வது எப்படி..? ஒரு முறை சரிசெய்தால் போதுமா..? அத்தனை கேள்விகளுக்கும் இங்கே விடை இருக்கிறது. வாங்க பார்க்கலாம்.
கருவளையங்கள் வருவதற்கான காரணம்:
உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் பொதுவாக மருத்துவப் பிரச்சனையின் அறிகுறி அல்ல. கருவளையங்கள் இயல்பாக சோர்வு காரணமாக ஏற்படும். சில நேரங்களில், உங்கள் கண்கள் வீங்கியிருக்கும், அது மறைந்த பிறகும் கூட அந்த இடத்தில் கருவளையம் வளரலாம். இவையன்றி, வயதாகும் நபர்களுக்கும் கருவளையங்கள் வளரும். தூக்கமின்மை, ஒவ்வாமை, வைட்டமின் குறைபாடு என கருவளையங்கள் வளர பல காரணங்கள் இருக்கின்றன. இவையன்றி, நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் தீய பழக்கங்களான புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றினாலும் கருவளையங்கள் உண்டாகும். இதை வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்வது எப்படி..? இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஜில்லென்ற டீ பேக்ஸ்:
உடனடியாக கருவளையத்திலிருந்து விடைபெற ஜில்லென்ற டீ பேக்குகளை உபயோகிக்கலாம் என்கின்றனர், அதனால் பயன்பெற்றவர்கள். குறிப்பாக க்ரின் டீ பேக்குகளை உபயோகிக்கலாமாம். கருவளையங்களை குறைக்க நினைத்தால் காஃபி குடிப்பதை நிறுத்த வேண்டும். அதில் உள்ள கஃபைன் உங்கள் ரத்த நாணங்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கும்.
எப்படி உபயோகிப்பது..?
தண்ணீரை டீ பேக்கை போட்டு, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், நன்கு குளிர்ந்த பிறகு அதை எடுத்து உங்கள் இரு கண்களிலும் 10-15 நிமிடங்களுக்கு வைக்கலாம். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் கருவளையம் நீங்கும்.
2. வெட்டிய உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காய்:
கருவளையத்தை நீக்க மிகவும் பயனுள்ள தீர்வுகளில் இதுவும் ஒன்றாகும். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்த குளிர்ச்சி தரும் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகியவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுவதுடன் கருமையைத் தடுக்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது..?
உளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி உங்கள் கண்களில் வைக்கவும். சுமார் 10-12 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை அகற்றவும். மாற்றாக, நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிகளின் சாற்றைப் பிரித்தெடுக்கலாம். ஒரு உருண்டை பஞ்சை எடுத்து, அதை அந்த சாற்றில் நனைத்து, உங்கள் கண்களுக்கு மேல் வைக்கவும். இதை கருவளையங்கள் முழுவதும் கவராகும் வகையில் வைக்க வேண்டும். . 1-3 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
3.கற்றாழை சாறு:
அலோ வேரா ஒரு பயனுள்ள மாய்ஸ்சரைசராக பார்க்கபப்டுகிறது. இதை உபயோகிப்பதனால் ஈரப்பதமான சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும். கூடுதலாக, கற்றாழை சருமத்திற்கு நம் உடல் நலனுக்கும் உதவுகிறது, வயதான தோற்றம் ஏற்படாமலும் தடுக்கிறது.
எப்படி உபயோகிப்பது..?
தூங்க செல்லும் முன் கற்றாழை சாற்றை எடுத்து கருவளையங்கள் இருக்கும் இடங்களில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இப்படி 5-7 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். இதனால் கருவலையங்கள் நீங்கும்.
4.ரோஸ் வாட்டர்:
இதை பாட்டி வைத்தியம் என்று கூட வைத்துக்கொள்ளலாம். இதனை, குறிப்பிட்ட வகை சருமம் உடையோர் என்று மட்டுமல்லாது எல்லா வகை சருமம் கொண்டோரும் பயன்படுத்தலாம். சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது மிகவும் உதவும். உங்கள் சருமம் பொலிவு பெறவும் ரோஸ் வாட்டர் உதவும்.
எப்படி உபயோகிப்பது..?
பஞ்சை எடுத்து அதை ரோஸ் வாட்டரில் நனைத்து, கண் இமைகளுக்கு மேல் வைக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே இருங்கள். சிறந்த ரிசல்டுகளை பார்க்க,ஒரு மாதம் முழுவதும் தூங்க போகும் முன் இதை செய்து பாருங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ