இந்த வீடியோவைப் பாத்தா பனீர் சாப்பிடத் தோணுமா? வைரலாகும் வீடியோவில் பனீர் தயாரிப்பு

Unhygenic Video Viral: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம். ஆனால், சுகாதாரமற்ற இடத்தில் பனீர் மீது உட்கார்ந்திருக்கும் மனிதனின் வைரல் படம் இணையத்தில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 30, 2023, 02:10 PM IST
  • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரம் அவசியம்
  • பனீரை எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
  • வைரலாகும் பனீர் வீடியோ
இந்த வீடியோவைப் பாத்தா பனீர் சாப்பிடத் தோணுமா? வைரலாகும் வீடியோவில் பனீர் தயாரிப்பு title=

பனீர் என்பது இந்தியக் குடும்பங்களில் விரும்பப்படும் ஒரு சுவையான உணவாகும், உணவு என்பது ருசிக்காக மட்டுமல்ல, ஊட்டச்சத்து நன்மைகளுக்காகவும் தான்.பலர் பனீரை கடையில் வாங்கினால்,சிலர் வீடுகளிலேயே பக்குவமாக தயாரித்துவிடுவார்கள். உள்ளூர் பால்பண்ணைகளில் நல்ல தரமான பனீர் கிடைக்கும்.

பனீர் மிகவும் விரும்பப்படும் ஒரு பால் தயாரிப்பு ஆகும். உடற்தகுதியில் கவனம் செலுத்தும் சைவ உணவு உண்பவர்கள் உடலில் உள்ள புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய பனீரில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுகிறார்கள். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாக உள்ளது. இணையத்தில் வெளியான பனீர் தொடர்பான ஒரு வீடியோ பலரால் பார்க்கப்பட்டு வைரலாகிவருகிறது.

சுகாதாரம் குறித்து அக்கறையைப் பேசும் இந்த வீடியோ, மைக்ரோ-பிளாக்கிங் தளமான 'X' இல், @zhr_jafri, வெளியாகி வைரலாகிவருகிறது. பனீர் அடுக்குகளின் மேல் சாலையில் இயல்பாக உட்கார்ந்திருக்கும் மனிதனைப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது. லுங்கியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனின் படத்தை உன்னிப்பாக கவனியுங்கள்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை ... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

அந்த மனிதர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தட்டில் அதிகப்படியான நீர் வடிகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் நெட்டிசன்கள், பிராண்டட் அல்லாத பனீர் வாங்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளனர். வைரல் வீடியோவை பாருக்கள்...

அதிர்ச்சி ஏற்படுத்தும் இந்த வீடியோ, உண்மையில் கவலையை ஏற்படுத்துகிறது. உள்ளூர் பால் கடைகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது, அதுமட்டுமல்ல, புகழ்பெற்ற பிராண்டுகள் கூட இதுபோன்ற சுகாதாரமற்ற மற்றும் பயமுறுத்தும் நடைமுறைகளில் பனீர் தயாரிக்கின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன. 

மேலும் படிக்க | பெண்களின் ஆரோக்கியத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புப் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

பனீர் தயாரிப்பது எப்படி?
அதிக கொழுப்பு அல்லது மிகக் குறைந்த கொழுப்பு உள்ள பாலாக இருந்தாலும் பனீரை தயாரிக்கலாம். பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பால் ஒரு கொதி நிலைக்கு வந்த பிறகு தீயை குறைக்கவும். நீர்த்த எலுமிச்சை சாறு அல்லது வினிகரை சேர்க்க ஆரம்பித்து, கலவையை மிகவும் மெதுவாக கிளறவும்.

சிறிது நேரத்தில் பாலில் இருந்து தண்ணீர் தனியாக பிரியும், தண்ணீரில் இருந்து பிரிந்திருக்கும் கலவையை வடித்து அதை பனீர் தயாரிக்க அழுத்தம் கொடுத்தால் சிறிது நேரத்தில் பனீர் தயாராகிவிடும். கடையில் வாங்கினாலும் சரி, வீட்டில் வாங்கினாலும், அது சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | முட்டையை பச்சையாக குடிக்கலாமா? ஆஃப் பாயில் முட்டை ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்குமா?

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்புகளும் தசைகளும் வலுவாக... பாலில் கலந்து சாப்பிட வேண்டிய ‘5’ உலர் பழங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News