உங்கள் விரல்களை அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருந்தால் அதனை இன்றே கைவிடவும். ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். விரல்களை மீண்டும் மீண்டும் நெட்டி முறிப்பது எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. அடிக்கடி நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தம் எலும்பு பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே அடிக்கடி விரல்களை நெட்டி முறிப்பது நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
விரல்களை நெட்டி முறிக்கும் பழக்கம் மூட்டுவலி பிரச்சனையை அதிகரிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். நம் விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே 'சைனோவியல்' எனப்படும் உயவு திரவம் உள்ள நிலையில், நாம் நெட்டி முறிக்கும்போது, இந்தத் திரவம் வேகமாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்கிறது. அப்போது, நெட்டி முறிக்கும் இடத்தில் வெற்றிடம் தோன்றி, 'நைட்ரஸ் ஆக்ஸைடு' உருவாகிறது. அதன் காரணமாக அதன் உள்ளே உருவான குமிழ்களும் வெடிக்கின்றன. விரல்களை நெட்டி முறிக்கும் போது சத்தம் வருவதற்கு இதுவே காரணம்.
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடியின் வலிமையைப் பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த பழக்கத்தை கைவிடுவது நல்லது.
எப்போதாவது நெட்டி முறிப்பதில் தவறில்லை. ஆனால், அதையே பழக்கமாக கொண்டிருந்தால் மூட்டுவலி ஏற்படும் அபாயமும் இதில் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR