அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமருந்து! இஞ்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Benefits of Eating Ginger In Tamil : நம் உடலில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, இஞ்சி உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இஞ்சி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ பார்க்கலாம்.

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2024, 07:44 PM IST
  • தினசரி இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
  • குமட்டல், வாந்தியை தடுக்கும்
  • வேறு என்னென்ன பயன்களை கொண்டுள்ளது?
அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமருந்து! இஞ்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா?  title=

Benefits of Eating Ginger In Tamil : நம் அனைவருக்குமே உடலில் நோய் நொடி அண்டாமல், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி, பிணி இல்லாத வாழ்க்கையை வாழ, சில வாழ்வியல் மாற்றங்களை நாம் செய்வதும் கட்டாயம் ஆகும். மேலும், ஒரு சில உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வதும் கட்டாயமாகும். அப்படி நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளுள் ஒன்று, இஞ்சி. இதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? கிடைக்கும் பலன்கள் என்ன? இங்கு பார்ப்போம்.

ஒற்றை தலைவலியை நீக்கும்:

தலைவலி என்ற பெயரே பலருக்கு பெரிய தலைவலி கொடுக்கும் விஷயமாக இருக்கிறது. மன அழுத்தம், மன குழப்பம், உணவு பழக்க வழக்கங்களினால் பலர் ஒற்றை தலைவலியை எதிர்கொள்கின்றனர். இதை நீக்க, பலர் தேனீர் அருந்துவது வழக்கம். இந்த ஒற்றை தலைவலியை நீக்க, இஞ்சி டீ குடிப்பது சிறந்தது என இதன் மூலம் பயனடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

மூட்டுவலியை போக்க உதவும்:

வயது மூப்பு காரணமாக பலருக்கு முட்டி வலி ஏற்படலாம். இந்த வலி வந்தால், பலர் மிகுந்த வேதனைக்கு உள்ளாவர். இதற்கு மருத்துவர்கள் பலர் பல்வேறு மருந்துகளை பரிந்துரைத்தாலும், இஞ்சி,சிறந்த வலி நிவாரணியாக பார்க்கப்படுகிறது. இஞ்சியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மூலம், கண்டிப்பாக இது வலி நிவாரணியாக செயல்படும் என கூறப்படுகிறது. 

மாதவிடாய் வலி நீங்க..

மாதவிடாய் சமயங்களில், பல பெண்கள் வயிற்று வலி தாளாமல் அவதிப்படுவர். இந்த வலியை நீக்கவும் இஞ்சி உபயோகப்படுகிறது. இதை மாதவிடாய் காலத்திற்கு முன்பாக தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு பார்க்கலாம். அல்லது எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து குடித்துப்பார்க்கலாம். மாதவிடாய் சீக்கிரமாக வருவதற்கு கூட சிலர் இதனை உபயாேகிப்பர். 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த..

ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சரியான உணவு பழக்கம் இல்லாதது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை போன்றவை நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம். இதை தவிர, மரபியல் தொடர்பு காரணமாகவும் நீரிழிவு நோய் வரலாம். எனவே, இந்த நோயின் ஆபத்துகளை கட்டுப்படுத்தவும், இது வராமல் தடுக்கவும் இஞ்சி உதவுகிறது.

மேலும் படிக்க | பூண்டு சாப்பிடுங்க!! செரிமானம், கொலஸ்ட்ரால், ஆஸ்துமா... இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

தொண்டை வலிக்கு நிவாரணி..

கால நிலை மாற்றங்கள் காரணமாக பலருக்கு தொண்டை வலி ஏற்படலாம். தொண்டை வலி மட்டுமன்றி, சளி காரணமாகவும் உடல் மிகவும் சோர்வடைந்தது போன்ற உணர்வு தோன்றலாம். இந்த நேரத்தில் இஞ்சியை உபயோகிக்கலாம். தண்ணீரில், தேனீரில் அல்லது வெறுமென சாப்பிடுவதால் கூட, உடலில் நோயதெரிப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், தொண்டை வலி, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கலாம். 

இதயத்தை பாதுகாக்க உதவும்..

தற்போதைய காலக்கட்டங்களில் இதய நோய் தொடர்பான பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இஞ்சி, இரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் சரியாக இயங்க உதவும் என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதய நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், மரபியல் தொடர்பான காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. எனவே, தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். 

வயிற்று உபாதைகளுக்கு அருமருந்து:

வயிற்று பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும் இஞ்சி அருமருந்தாக திகழ்கிறது. குமட்டல், அஜீரண கோளாறு, வாந்தி-மயக்கம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

மேலும் படிக்க | வேகவேகமா உடல் எடையை குறைக்க இந்த டிப்ஸ் கண்டிப்பா உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News