Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது மற்ற நச்சுப் பொருட்கள் நுகர்வு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ள சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்.
உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய். நுரையீரல் புற்றுநோயானது இந்திய ஆண்களிடையேயான புற்றுநோய் இறப்புக்கான மிகவும் பொதுவான காரணம் என கூறப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க பல காரணங்கள் இருந்தாலும், பீடி - சிகரெட் உட்பட எந்த வகையான புகையிலை பொருட்களையும் உட்கொள்வது மிகப் பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. காற்று மாசுபாடு, நிலக்கரி பொருட்களிலிருந்து வரும் புகையும் இதற்கு காரணாமாகிறது.
நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப நிலைகளில் கண்டறியப்பட்டால் அதனை குணப்படுத்தி விடலாம். எனவே, சில அறிகுறிகளை புறக்கணிக்காமல், இருப்பது நல்லது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் முக்கியம் என சுகாதார நிபுணர்கள் (Health Tips) கூறுகின்றனர். இதனால் இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்தால், உடனடியாக சிகிச்சையளிக்க முடியும். இந்நிலையில், நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அதீத சோர்வு பிரச்சனை
நல்ல உணவு, இரவில் நல்ல தூக்கம் என்ற நிலையிலும் சோர்வாக உணர்ந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். சோர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிகவும் சோர்வாக அல்லது பலவீனமாக இருப்பது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
சுவாசிப்பதில் சிரமம்
மூச்சுத் திணறல் அல்லது படிக்கட்டுகளில் ஏறும் போது அல்லது சிறிது தூரம் நடக்கும்போது சுவாசிப்பதில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். புற்றுநோய் கட்டி காற்றுப்பாதைகளைத் தடுக்கிறது அல்லது சுருங்குகிறது அல்லது நுரையீரலைச் சுற்றி திரவத்தை உருவாக்குகிறது. இதனால், காரணம் ஏதுமின்றி திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்க
திடீர் எடை இழப்பு
எந்த காரணமும் இல்லாமல் திடீரென எடை இழப்பு பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். நுரையீரல் புற்றுநோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக திடீர் எடை இழப்பு இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், எந்த காரணமும் இல்லாமல் உங்கள் எடை குறைகிறது மஎன்றால், நிச்சயமாக உடனடியாக அதைப் பற்றி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.
நெஞ்சு வலி
நுரையீரல் புற்றுநோய் அடிக்கடி நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு வலி ஏற்பட்டால் எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. ஆழ்ந்த மூச்சு விடும் போதும், இருமல் அல்லது சிரிக்கும் போது வலி மேலும் அதிகரித்தால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
எலும்புகளில் வலி
நுரையீரல் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். புற்றுநோய் பரவிய இடத்தில், உடலின் மற்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தலாம். திடீரென எலும்பு வலி, குறிப்பாக முதுகுவலி ஏற்பட்டால், உடனடியாக அதை பரிசோதிக்கவும்.
பிற அறிகுறிகள்
மேலே குறிப்பிட்டுள்ளதைத் தவிர, குரலில் மாற்றம், அடிக்கடி தொற்று ஏற்படுதல், தலைவலி போன்ற அறிகுறிகளைக் கண்டால், அலட்சியப்படுத்தாதீர்கள், இவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம், மேலும் இந்த அறிகுறிகள் தீவிரமானதாக தோன்றினால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ