நாள் முழுவதும் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவும் ‘மேஜிக்’ டிரிங்க்ஸ்

தூக்கமின்மை, அளவிற்கு அதிகமான வேலை பளு, போதுமான உடல் பயிற்சி இல்லாதது அல்லது முறையற்ற உணவு ஆகியவை வெகு விரைவில் சோர்வடையச் செய்யும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2022, 06:49 PM IST
  • உடல் பலவீனத்தையும் சோர்வையும் நீக்கும் ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
  • எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தால் நமக்கே எரிச்சல் வரும்.
  • நமது உடலில் சோர்வு இருந்தால் அன்றாட வேலைகளை செய்து முடிப்பதே பிரச்சனையாக இருக்கும்.

Trending Photos

நாள் முழுவதும் சோர்வு ஏற்படாமல்  இருக்க உதவும் ‘மேஜிக்’ டிரிங்க்ஸ் title=

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். எப்போது பார்த்தாலும் சோர்வாக இருந்தால் நமக்கே எரிச்சல் வரும். நாள் முழுவதும் நமது உடலில் சோர்வு இருந்தால் அன்றாட  வேலைகளை செய்து முடிப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கும். இந்த சோர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். தூக்கமின்மை, அளவிற்கு அதிகமான வேலை பளு, போதுமான உடல் பயிற்சி இல்லாதது அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை வெகு விரைவில் சோர்வடையச் செய்யும்.இந்நிலையில் உடல் பலவீனத்தையும் சோர்வையும் நீக்கும் ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

கீழ்கண்ட ஜூஸ் வகைகளில் ஒன்றை எடுத்துக் கொள்வதன் மூலம் சோர்வை விரட்டலாம். 

பிரெஷ் ஜூஸ்கள்

ஆப்பிள், சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு பழச்சாறுகள் உங்களை நால் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆரஞ்சு பழச்சாறு அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

காய்கறி ஜூஸ் 

காய்கறி ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு தயிர், வெள்ளரி மற்றும் தக்காளி தேவைப்படும். இதைச் செய்ய, முதலில் தயிரை தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும், பின்னர் அதில் துருவிய வெள்ளரி தக்காளியை சேர்க்கவும். கல் உப்பு மற்றும் வறுத்த சீரகம் சேர்த்து குடிக்கவும். வெள்ளரிகளில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் மற்றும்  நீர் சத்து உள்ளது

இளநீர்

இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் அருந்தலாம். காரணம் அதில் உள்ள கனிம சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. உடலுக்கு சிறந்த பானங்களில் ஒன்று இளநீர். இது உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.  இளநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் என்ற தேவையில்லாத பயம் தேவையில்லை. ஏனென்றால்,  நாம் அருந்தும் மற்ற சாஃப்ட் ட்ரிங்குகளை ஒப்பிடும் போது மிக மிக குறைத அளவே இருக்கும். இளநீரில் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News