Home Remedies For Good Sleep: தூக்கமின்மை பிரச்சனை இந்த நாட்களில் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
அவசரமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், உணவு மற்றும் பானங்களை தவறான நேரத்தில் எடுத்துக் கொள்வது என தூக்கம் இல்லாமல் தவிப்பதற்கு காரணங்கள் பல உண்டு.
தூக்கமின்மை ஒரு பிரச்சனையாகும், தூக்கம் கெடுவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடல் பருமன், இதய நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மை காரணியாக மாறுகிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் பிரபல உணவியல் நிபுணருமான ருஜுதா திவேகர் சமீபத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கான தீர்வை கூறுகிறார்.
மேலும் படிக்க | பால் அருந்தினால் கிடைக்கும் அசத்தலான 5 நன்மைகள்
ஒரே ஒரு பானம், இதைக் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்களுக்குமான பானத்தை அவர் பரிந்துரைக்கிறார்.
இரவில் தூங்கும் முன் பாலைப் பருகினால், ஆழ்ந்த உறக்கம் கண்ணை அரவணைக்கும் என்று சொல்கிறார். இது மாட்டுப்பாலோ அல்லது எருமைப்பாலோ அல்ல, முந்திரிப்பால்.
முந்திரி பாலை எப்படி தயாரிப்பது மற்றும் அதை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | பொலிவான சருமத்திற்கு பால்
ஒரு கைப்பிடி அளவு முந்திரியை எடுத்து, ஒரு கிளாஸ் பாலில் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரி நன்கு ஊறியதும், பாலில் இருந்து எடுத்து அதை அரைத்து வைக்கவும். அரைப்பதற்கு பாலை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் நன்கு மைய அரைபட்டிருக்க வேண்டும்.
நன்றாக நைஸாக அரைபட்ட முந்திரி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து 5-10 நிமிடங்கள்அடுப்பில் வைக்கவும்.
தேவைக்கேற்ப இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, பாலில் சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, மேலும் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
இந்த முந்திரிப்பாலை சூடாகவோ, ஆற வைத்தோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளுமையாகவோ குடிக்கலாம்.
மேலும் படிக்க | சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தூக்கம் தொடர்பான துக்கம் தீர, தினமும் இரவில் தூங்கும் முன் இந்த முந்திரிப்பாலை அருந்துவதை ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான ருஜுதா திவேகர் பரிந்துரைக்கிறார்.
சர்க்கரை சேர்க்க விரும்பவில்லை என்றால், தேன் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற மூலங்கள் நிறைந்துள்ளன.
பொதுவாக முந்திரியை அளவாக உட்கொள்வது நல்லது. ஆனால், ஒவ்வாமை அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முந்திரிப்பாலை பருக வேண்டாம்.
முந்திரியின் ஆரோக்கிய நலன்களைப் பெற ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) முந்திரியை உட்கொண்டால் போதுமானது.
மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR