வயதானால் முடி உதிர்வது, முடி வலுவிழந்து காணப்படுவது, முடி நரைப்பது போன்றவை மிகவும் எளிதான விஷயம். ஆனால், தற்போதைய இளம் தலைமுறையினர் பலரும் மேற்கூரிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க பல வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட வீட்டு வைத்தியங்களில் ஒன்றுதான், கற்றாழையை தலைமுடிக்கும் பயன்படுத்துவது. இதை எப்படி பயன்படுத்தினால் முடி உதிர்விலிருந்து தப்பிக்கலாம்? இதோ சில ஈசி டிப்ஸ்.
தலைமுடியை வலுப்படுத்தும் கற்றாழை:
முடியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் மகத்துவமான மூலிகையாக கருதப்படுவது, கற்றாழை. இதில், உள்ள ஜெல் போன்ற சாற்றில் வைட்டமின்களும் அமினோ ஆசிட்களும் நிறைந்துள்ளது. இவை, முடியை பளபளப்பாக வைப்பதோடு முடி நுனிகளை உறுதிப்படுத்தவும் செய்கிறது. உச்சந்தலையில் உள்ள பி.எச் அளவை சமநிலை படுத்தில் முடி வளரவும் கற்றாழை உதவுகிறது. முடி உதிர்வை தவிர்க்கவும் உறுதியான உச்சந்தலையை பெறவும் கற்றாழை உதவுகிறது.
கற்றாழையை எப்படி உபயோகிக்க வேண்டும்?
தேவையான பொருட்கள்:
>கற்றாழை தழை மற்றும் சாற்றினை தலையில் தேய்ப்பதற்காக எடுத்துக்கொள்ளவும்.
>கத்தி
>ஸ்பூன் அல்லது ப்ளண்டர்
>ஒரு கிண்ணம்
>ஷவர் கேப், அல்லது தலையை காற்றுப்புகாமல் பார்த்துக்கொள்ளும் வகையிலான ராப்.
மேலும் படிக்க | இரவோடு இரவு முகம் ஜொலிக்க ஹோம் மேட் கற்றாழை ஜெல் ஒன்று மட்டும் போதும்
செய்முறை:
>வீட்டில் கற்றாழை செடி இருந்தால் அதிலிருக்கும் கற்றாழையையும் அதன் சாற்றினையும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் கடையில் இருந்து ப்யூர் கற்றாழை ஜெல்லை வாங்கிக்கொள்ளலாம்.
>செடியில் இருந்து பறித்த கற்றாழை என்றால் அதை நன்கு கழுவிய பிறகு உபயோகிக்கவும்.
>கற்றாழையின் முனைகளை பொறுமையாக வெட்டவும். இதை செய்யும் போது கத்தியை பார்த்து உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால், உள்ளிருக்கும் கற்றாழை சாறு வீணாகிவிடும்.
>ஸ்பூன் அல்லது ஸ்கூப் போன்ற கரண்டியை வைத்து அந்த கற்றாழை சாற்றினை வெளியில் எடுக்கவும். எடுத்த அந்த சாற்றினை ஒரு கிண்ணத்தில் போடவும்.
>கடையில் இருந்து வாங்கிய கற்றாழை சாறு என்றால், உங்கள் தலை முடிக்கு ஏற்ற அளவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
>எடுத்து வைத்த சாற்றினை ப்ளண்டர் அல்லது ஸ்பூனை வைத்து நன்கு கலக்கவும்.
>கற்றாழை சாற்றினை தலையில் தடவுவதர்கு முன்னர் முடி ஈரமாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
>உங்கள் விரல்கள் அல்லது ஏதேனும் பிரஷ்ஷினை வைத்து நேரடியாக கற்றாழை சாற்றினை உங்கள் உச்சந்தலையில் தடவலாம்.
>முடியின் வேரில் இருந்து ஆரம்பித்து, முடி நுனி வரை இந்த கற்றாழை சாற்றினை தடவவும்.
>முழுமையாக உங்கள் தலையில் கற்றாழை சாற்றினை தடவிய பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மெதுவாக உங்களது தலையினை மசாஜ் செய்யவும். இப்படி செய்தால், முடி வேகமாக வளர உதவும் என கூறப்படுகிறது.
>பதினைந்து நிமிடங்கள் கழித்து உங்கள் முடியை அலசலாம்.
>கற்றாழை முடிக்கு மட்டுமன்றி சருமத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது.
கற்றாழையின் பிற நலன்கள்:
கற்றாழை முடிக்கு மட்டுமன்றி உடலுக்கும் பல விதமான நன்மைகளை விளைவிக்கிறது. ஆனால், இதை எடுத்துக்கொள்ளும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.
>கற்றாழையில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது, இதனால் உடல் குளுர்ச்சியாக இது உதவுகிறது.
>செரிமான கோளாறுகளை தவிர்க்கவும் கற்றாழை உதவுகிறது.
>உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க கற்றாழை உதவுவதாக மருத்துவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
>கற்றாழை சம்பந்தப்பட்ட பொருட்களை குழந்தை பேறு சமயங்களில் எடுத்துகொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Business Idea: 5 மடங்கு லாபம் தரும் கற்றாழை; லட்சங்களில் வருமானம் !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ