புதுடெல்லி: பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் இலவச ஆணுறை வழங்கும் விற்பனையகம் திறக்கப்பட்டது. இந்த விற்பனையகம் திரக்கப்பட்ட 69 நாட்களில் சுமார் 10 லட்சம் ஆணுறைகளுக்கான ஆர்டரினை பதிவு செய்து இந்தியர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
அந்த ஆன்லைன் விற்பனையகம் கொடுத்துள்ள தகவளில்படி, அவர்கள் இதுவரை சுமார் 9.56 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இதில் 5.14 லட்சம் ஆணுறைகள் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக கோரப்பட்டது எனவம் மற்றும் மீதமுள்ள (4.41 லட்சம்) ஆணுறைகள் தனிநபர்கள் மூலம் கோரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய இரு இடங்களில் தான் அதிக அளவில், தனிநபர் ஆர்டர்கள் பெரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்துஸ்தான் லேட்ஸ் லிமிடெட் (HLL) நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆன்லைன் விற்பனையகம் செயல்பட்டு வருகின்றது.
HLL நிறுவனம் தெரிவித்துள்ளதன் படி, 10 லட்சம் ஆணுறைகள் வழங்க திட்டமிடப்பட்டது, மேலும் இந்த எண்ணிக்கையானது வரும் டிசம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஜூலை முதல் வாரத்தில் அனைத்து ஆணுறைகளும் காலியானது பெரும் ஏமாற்றத்தை தருகின்றது என தெரிவித்துள்ளது.
எனினும் இந்த முயற்சியை நாங்கள் கைவிடப் போவதில்லை. ஆணுறைகளை இலவசமாக வழங்குவது என்பது நிச்சயம் நாட்டின் பெரும்பாலான மக்கள் கூட்டத்திற்கு நன்மை பயக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.