நம் உடல்நிலை மோசமடைந்தால், நாம் மருத்துவரை கலந்தோசித்த பிறகு அவர் பரிந்துரைக்கும் மருந்தை எடுத்துக் கொள்கிறோம். அந்த சிறிய மாத்திரை எப்படி உடனடியாக உங்கள் உடல் நிலையை சரி செய்கிறது என என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
மாத்திரை மருந்துகள் வலியை எவ்வாறு சரியாகப் புரிந்துகொள்கிறது என்பதும் உடலின் எந்தப் பகுதியை குணப்படுத்த வேண்டும் என்பதை எப்படி புரிந்து கொள்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா... மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை ஒன்று நாம் அறிந்து கொள்ளலாம்.
எந்தப் பகுதியை குணப்படுத்த வேண்டும் வேண்டும் என்பதை மருந்துகள் எப்படி அறிந்து கொள்கின்றன
கொலராடோ பல்கலைக்கழகத்தின் அன்சுட்ஸ் மருத்துவ வளாகத்தின் மருந்து அறிவியல் பேராசிரியரான டாம் அன்கார்டோக்வி இது குறித்து கூறுகையில், மருந்துகள் உடலின் பல்வேறு பாகங்களை எளிதில் குணப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைப் புரிந்து கொள்ள, மருந்து உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
உடல் வலி அல்லது தலைவலிக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, அது உண்மையில் உங்கள் மூளையை அல்லது வலி ஏற்படும் உடலின் பகுதியை சென்றடைகிறது. உண்மையில், சில மருந்துகள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், சில குறிப்பிட்ட பகுதியில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், மருந்துகளில் நிலைத்தன்மை, சுவை மற்றும் நிறம் போன்ற பண்புகளை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் பண்புகளை உருவாக்க சில பொருட்கள் மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தலைவலிக்கு வழங்கப்படும் பிரபலமான மருந்தான ஆஸ்பிரின், உடைக்காமல் வாயில் கரையும் வகையிலான சில பொருட்களை கொண்டுள்ளது.
உடலில் மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கம்
மருந்தின் சிறிய மூலக்கூறுகள் உடலின் வெவ்வேறு ஏற்பிகளை ஒன்றாக இணைக்கின்றன, இதனால் அவை தங்களது தன்மைக்கு ஏற்ப உடலில் உள்ள உபாதைகளை சரி செய்யலாம். வாயால் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் முதலில் தண்ணீரில் கரைந்து, பின்னர் வயிற்றுக்குள் செல்கின்றன. அதன் பிறகு சிறுகுடலில் இருக்கும் அமிலத்தில் கரைகிறது.
மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற மருந்துகள் குடலில் விணைபுரிந்து குணப்படுத்துகிறது. அதே சமயம் இரும்பு மாத்திரைகள் குடல்/குடலின் சுவர்கள் அல்லது சுவர்களில் வினை புரிந்து குணப்படுத்துகிறது. பெரும்பாலான மாத்திரைகள் குடல் வழியாக இரத்தத்தில் கரைகின்றன. இரத்தத்தை மெல்லியதாக மாற்றுவது இரத்தத்தின் ஏற்பிகளை நேரடியாக சென்று அடைகிறது.
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR