Beni kōji Health Supplement : கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாத்திரை என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு ஆரோக்கிய சப்ளிமெண்ட் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி ஒரு உயிரை பலி வாங்கியுள்ளது. எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெனி கோஜி என்பது ஒரு வகை அரிசி (எல்) ஆகும், இது மொனாஸ்கஸ் பர்பூரியஸைப் பயன்படுத்தி புளிக்கவைக்கப்படுகிறது. இதனால், அரிசி வித்தியாசமானஅடர் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
இந்த ஹெல்த் சப்ளிமெண்ட்டை நீண்ட காலமாக உட்கொண்ட ஒருவரின் இறப்புக்கு காரணம் என்றும், பலர் இந்த மாத்திரையை தொடர்ந்து உண்டதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஹெல்த் சப்ளிமெண்டை தயாரித்த கோபயாஷி பார்மாசூட்டிகல், பெனி கோஜி கொண்ட தயாரிப்புடன் தொடர்புடைய இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாத்திரை என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஆரோக்கிய சப்ளிமெண்ட்டை தவறாமல் உட்கொண்டதாக நம்பப்படும் ஒருவரின் மரணம் குறித்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Japanese drugmaker Kobayashi Pharmaceutical has announced that it is voluntarily recalling a line of dietary supplements containing beni kōji fermented rice after reports of kidney problems from 13 people, including six who required hospitalization. https://t.co/kdhW4regDZ
— The Japan Times (@japantimes) March 24, 2024
மன்னிப்பு கேட்கும் நிறுவனம்
ஒசாகாவை தளமாகக் கொண்ட கோபயாஷி ஃபார்மாசூட்டிகல், சப்ளிமெண்ட் எடுத்துக்கொண்ட பலருக்கு, சிறுநீரக பிரச்சனைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்படும் அந்த மூலப்பொருளைக் கொண்ட தயாரிப்புடன் தொடர்புடைய மரணம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பிரச்சனையை எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க | தொப்பை குறைஞ்சு தட்டையான வயிறு வேணுமா? அப்ப இந்த 5 யோகா ஆசனத்தை செய்யுங்கள்
மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பை திரும்பப் பெற்றதாகவும், சிறுநீரக நோயால் ஏற்பட்ட மரணத்திற்கும் தயாரிப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதால், சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதை நிறுத்துமாறு மக்களை வலியுறுத்தியதாகவும் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
பெனி-கோஜி கொலஸ்ட்ரால் ஹெல்ப் சப்ளிமெண்ட், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாத்திரை என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 2021 முதல் மூன்று வருடங்களாக தொடர்ந்து உண்டு வந்த நபர் இறந்துள்ளார், அவர் 35 பைகளுக்கு மேல் ஆர்டர் செய்துள்ளார்.
மன்னிப்புக் கோரிய கோபயாஷி பார்மாசூட்டிகல்
வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை முதன்மையான முன்னுரிமையாக வைத்துள்ளோம். இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம், என்று நிறுவனம் தங்கள் இணையதளத்தில் மன்னிப்புக் கோரியுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் முன்னர் கண்டறியப்படாத நச்சுப் பொருட்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரியை பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளது. அதோசு, சிறுநீரின் நிறத்தில் மாற்றம், மூட்டுகளில் வீக்கம் மற்றும் சோர்வு என பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் படிக்க | முதுமையிலும் மூட்டு வலி அண்டாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை மில்லியன் கணக்கான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாத்திரை பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர் ஒருவர் நிறுவனத்தை எச்சரித்த பிறகு, நுகர்வோரின் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் தெரிந்துக் கொள்வதற்காக நிறுவனம் ஹாட்லைனை அமைத்தது.
பெனி கோஜி
பெனி கோஜி என்பது ஒரு வகை அரிசியாகும், இது மொனாஸ்கஸ் பர்பூரியஸைப் பயன்படுத்தி புளிக்கவைக்கப்படுகிறது - இது அரிசிக்கு அதன் தனித்துவமான அடர் சிவப்பு நிறத்தை வழங்குகிறது. இது, இரத்தத்தில் எல்டிஎல் அல்லது "கெட்ட" கொழுப்பைக் குறைக்க உதவும் அரிசி என்று நம்பப்படுகிறது. நிறம் மற்றும் சுவையை சேர்க்க பல உணவு தயாரிப்புகளில் பெனி கோஜி பயன்படுத்தப்படுகிறது.
உணவு மற்றும் பான நிறுவனங்களுக்கு பெனி கோஜியை வழங்கும் நிறுவனம், மூலப்பொருள் கொண்ட தயாரிப்புகளை திரும்பப்பெறும்படி கேட்டுக் கொண்டது. கோபயாஷி பார்மாசூட்டிகல், ஜப்பான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 52 நிறுவனங்களுக்கு பெனி கோஜியை உணவுப் பொருளாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ