பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா

Beetroot Benefits: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது சளியை அகற்ற உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 19, 2022, 10:29 AM IST
  • பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ள.
  • நீரிழிவு நோயாளிகளும் பீட்ரூட்டை சாப்பிடலாமா?
  • பீட்ரூட்டின் நன்மைக்காக அதை சாப்பிட்டால், அதனால் நீரிழிவு நோயாளிகள் அவதிப்பட நேரிடுமா?
பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா title=

வண்ணமயமான பீட்ரூட் ஒரு அற்புதமான காய்கறி ஆகும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இது 'சக்தி வாய்ந்தது' என்று கூறுவார்கள். இதன் விசேஷம் என்னவென்றால், இது காய்கறியாக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, அதே போல் சாலட் மற்றும் ஜூஸ் வடிவிலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெளிநாட்டில் வளர்க்கப்படுகிறது, ஆனால் இந்த காய்கறி இந்தியாவுக்கு 'புதியது' மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இது இந்தியாவுக்கு வந்தது என்று கூறலாம். வாருங்கள் பீட்ரூட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பீட்ரூட் ஹை-ஃபை ஐட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. கிமு 800 முதல் 300 வரை, கிரீஸ், ரோமன், எகிப்து, நெதர்லாந்து (ஆர்ட்ஸ்வுட்டின் புதிய கற்காலம்) ஆகிய நாடுகளில் அதன் சாகுபடி தொடங்கியது. கிமு 600 இல் பாபிலோனின் தொங்கும் தோட்டத்திலும் அவை வளர்க்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளிலும் இதன் படங்கள் கிடைத்துள்ளன. இங்கு பீட்ரூட் விளைந்தபோது அதன் இலைகளை கீரை போன்று கீரையாக செய்து உண்ணப்பட்டது. அதன் வேரும் சத்து நிறைந்தது என்பது பின்னர் தெரியவந்தது. பின்னர் இதன் இலைகள் பச்சையாக உண்ணப்பட்டு, செரிமானம் மற்றும் இரத்தம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. 

மேலும் படிக்க | Fatty Liver: கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கும் ‘4’ எளிய வழிகள்!

பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். பீட்ரூட் சாப்பிடுவதால், அல்லது அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

* வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்: நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன் பீட்ரூட்டை சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால், உடலுக்கு இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.

* பல நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு: நீரிழிவு நோய் இந்தியாவில் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இது சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது என்பதால் இது பல நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

* இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்: பீட்ரூட்டில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன் பீட்ரூட்டை உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இதனால் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். 

மேலும் படிக்க | தினமும் ஒரு கிவி பழம்: உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News