Diabetes Home Remedies: நித்திய கல்யாணி என்னும் அற்புதமான செடியின் அருமை தெரியாமல், நாம் அதனை அழகு செடி என்று வளர்த்து வருகிறோம். கத்திரிப் பூ ஊதா, வெள்ளை என பல நிறங்களின் பூக்களை கொடுக்கும் செடியான நித்திய கல்யாணி, பாரம்பர மருத்துவ சிகிச்சையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் நித்திய கல்யாணி பூவை மருந்தாக எடுத்துக் கொள்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நித்தியகல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
கணையத்தில் இயற்கையாக இன்சுலினை சுரக்க வைக்கும் நித்திய கல்யாணி
உடலில் இன்சுலின் உற்பத்தியை பெருக்கும் தன்மை கொண்ட நித்திய கல்யாணி, எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதில் உள்ள முக்கிய ரசாயனங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். நித்ய கல்யாணியில் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும், வின்கமைன், அல்கோலைட்ஸ், வின்பிளாஸ்டின் ரசாயனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்சுலின் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமப்படுத்தும் ஹார்மோன் என்பது அனைவரும் அறிந்ததே. நித்திய கலயாணியை சரியான வகையில் மருந்தாக பயன்படுத்தும் போது, கணையம், இயற்கையாக சரியான அளவில் இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கும். இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், கணையத்தின் பீட்டா செல்களையும் இது பலப்படுத்துகிறது.
நித்திய கல்யாணியை மருத்தாக பயன்படுத்தும் முறை
நித்திய பூவின் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். மாவுச்சத்து குளுகோஸாக உடைவதை நித்தியகல்யாணி தடுக்கிறது. நித்திய கலயாணி பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீரை காலையில் உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். தேநீர் தயாரிக்க, இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். இந்த செடியின் பூக்கள் மற்றும் இலைகளை மென்று சாப்பிடுவதும் பயனளிக்கும். இதை விட எளிதான வழி, அதன் பொடியை தயாரித்து வைத்துக் கொண்டு உயயோகித்தல்
நித்திய கல்யாணி இலை பொடியை தயாரிக்கும் முறை
நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டீஸ்பூன் நித்திய இலை பொடியை வெதுவெதுபான தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது மிகவும் கசப்பாக இருக்கும் என்றாலும், வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படும்.
மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!
நுரையீரல் ஆரோக்கியமும் நித்திய கல்யாணியும்
இது ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த மட்டுமின்றி, நுரையீரல் தொற்று, சளி போன்றவற்றை நீக்கி குணம் அளிக்கிறது. ஆஸ்துமா இருமல் மூச்சுக்குழாய் வளர்ச்சி போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க நித்திய கல்யாணி பயன்படுத்தப்படுகின்றன. தொண்டைப்புண் மற்றும் இருமல் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்று வலி, வாயு, ஆசிட்டி போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளை போக்குகிறது. மலச்சிக்கல் பிரசனையினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த செடியின் இலையும் பூவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ