Men's health: பாலியல் ஆரோக்கியத்திற்கு சமையலறையின் இந்த ‘5’ மசாலாக்கள் போதும்..!

இன்றைய காலகட்டத்தில் தவறான வாழ்க்கை முறை மற்றும் தாறுமாறான உணவு பழக்க வழக்கம் ஆகியவை காரணமாக மக்களின் பாலியல் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம்

Written by - Vidya Gopalakrishnan | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2021, 12:55 PM IST
Men's health: பாலியல் ஆரோக்கியத்திற்கு சமையலறையின் இந்த ‘5’  மசாலாக்கள் போதும்..! title=

Spices to Boost Sexual Health:   இன்றைய காலகட்டத்தில் தவறான வாழ்க்கை முறை மற்றும் தாறுமாறான உணவு பழக்க வழக்கம் ஆகியவை காரணமாக மக்களின் பாலியல் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். குழந்தை பேறு இல்லாததற்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளதையும் பார்க்கிறோம். பாலியல் பிரச்சனைகளுக்கு உங்கள் சமையல் அறையிலேயே தீர்வு உள்ளது.   சில மசாலாப் பொருட்கள் உங்களுக்கு இதில் பெரிதும் உதவும். ஆயுர்வேதத்தில் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த நீண்ட காலமாக மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சில வீட்டு மசாலாப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

1. வெந்தயம்
 வெந்தயத்தில் காணப்படும் சப்போனின்கள், டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஹார்மோன் காரணமாக, ஆண்களுக்கு பால் உணர்வு அதிகரிக்கிறது என டாக்டர் அப்ரார் முல்தானி கூறுகிறார்

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

2. பூண்டு 
பூண்டு பாலுணர்வை தூண்டும் தன்மை (aphrodisiac)உள்ளதோடு,  உடல் உறவின் போது  விந்து விரைவில் வெளியேறுவதையும் தடுக்கிறது. நீண்ட நேரம் உடலுறவு கொள்ளவும் உதவுகிறது.  வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதும் நல்ல பலனை தரும்.

3. கிராம்பு

கிராம்பில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. உங்களுக்கு ஏதேனும் பாலியல் பிரச்சனை இருந்தால், கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனை பாலியல் விழிப்புணர்வு மசாலா என்றும் அழைக்கப்படுகிறது.

ALSO READ | Protein deficiency: உடலில் புரத சத்து குறைபாட்டின் ஆபத்தான அறிகுறிகள்

இது தவிர கீழ்கண்ட இரு ஆயுர்வேத மூலிகைகளும் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

4. அஸ்வகந்தா
அஸ்வகந்தா என்ற இந்த மருத்துவ மூலிகை ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். அஸ்வகந்தா மூளையின் சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் பாலுணர்வையும் தூண்டுகிறது. இது ஆண்கள் தங்கள் விந்து வெளியேறுவதை சிறப்பாகக் கட்டுபடுத்த உதவுவதோடு, நீண்ட நேரம் உடலுறவு கொள்ளவும் உதவுகிறது.

5.ஷிலாஜித்

ஷிலாஜித் என்பதும் மருத்துவ மூலிகை ஆகும். ஆயுர்வேத மூலிகையான ஷிலஜித் எடுத்துக் கொள்வது பாலியல் சக்தியை அதிகரிக்கிறது என்று மருத்துவர் அப்ரார் முல்தானி விளக்குகிறார். இதுமட்டுமின்றி, இது உடலை இளமையாகவும் வைத்திருக்கிறது.

ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News