பிளாஸ்டிக் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மை செய்திருக்கிறதோ, அதே அளவு ஆபத்தானது. மனித உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத துகள்களில் பிளாஸ்டிக் படிமங்கள் சேருவது இப்போது அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். அது இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டி ஆண்களின் விந்தணுகள் வரை அடைந்துள்ளன என்பது தான் அதிர்ச்சியளிக்ககூடிய செய்தியாக இருக்கிறது. இது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் விந்துகளில் மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.
'தி கார்டியன்' நாளிதழின் அறிக்கையின்படி, ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்த கொடிய விஷயம் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை (ED) ஏற்படுத்துகிறதா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் ஆண்களின் கருவுறுதல் குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறும் நிலையில், தற்போது மைக்ரோபிளாஸ்டிக் இதற்குக் காரணம் என்று சொல்வது கடினம். இருப்பினும், ஆய்வகத்தில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தொடர்பாக மேலும் ஆய்வு செய்த பின்னரே உண்மை தெரியவரும்.
மேலும் படிக்க | சுகர் லெவல் தட்டி வைக்க.. இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் ஆண்களின் அந்தரங்க பாகங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை உணவு மற்றும் பானங்களை பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து அவை ஆண்களின் உடலுக்குள் செல்கின்றன. இருப்பினும், இப்போது கேள்வி என்னவென்றால், இந்த துண்டுகள் எப்படி அந்தரங்க பகுதியை அடைந்தது? என்பது தான். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விறைப்புத்தன்மையின் போது அந்தரங்க பாகங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால் மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் அங்கு சென்றிருக்கலாம். இந்த துண்டுகள் நமது இரத்த ஓட்டத்தில் கரைந்து, இதன் மூலம் பல உடல் உறுப்புகளை சென்றடைகின்றன. பொதுவாக மக்கள் சாப்பிடும்போதும், குடிக்கும்போதும், சுவாசிக்கும்போதும் மைக்ரோபிளாஸ்டிக்ஸை விழுங்குகிறார்கள். அவை இரத்த ஓட்டம் மூலம் இந்த பகுதிகளை சென்றடைக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுகின்றன, அது மெதுவாக மைக்ரோபிளாஸ்டிக் ஆக உடைகிறது. அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக் கடலுக்குள் செல்கிறது, இதன் காரணமாக அது தண்ணீரில் வாழும் விலங்குகளின் உடல்களை அடைகிறது. இது தவிர, உணவுப் பொருட்கள் மூலமாகவும் மனித உடலைச் சென்றடைகிறது. ஒட்டுமொத்தமாக, மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் மனிதர்கள் தங்களுக்கு தெரியாமலேயே சாப்பிட தொடங்கிவிட்டனர் என்று கூறலாம். இது ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்றாலும், அது குறித்த அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளே இப்போது எழுந்திருக்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும்.
மேலும் படிக்க | உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ