வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பயன்பாடு: வெங்காயம் சிலருக்கு மிகவும் பிடிக்கும் ஒரு காய்கறி, சிலருக்கு அதை சாப்பிடவே பிடிக்காது. ஆனால் வெங்காயத்தை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை வழங்குகிறது. மேலும், அதை சரியான அளவில் மற்றும் சரியான முறையில் உட்கொண்டால், வீட்டிலேயே பைல்ஸ் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது பெரிதும் உதவும். இந்த கட்டுரையில், வெங்காயத்தின் நன்மைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது அவற்றின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். வெங்காயத்தை சரியாகப் பயன்படுத்துவது எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்பதையும், ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதையும் பார்ப்போம்.
1. மூல நோயை போக்கும் வெங்காயம் (Onion for Piles)
பைல்ஸ் (Piles) அல்லது மூல நோயாளிகள் அடிக்கடி வலி, எரிச்சல் உட்பட பல உடல் நல பிரச்சனைகளை (Health TIps) சந்திக்க நேரிடும். ஆனால் இந்த பிரச்சனைகளை குறைக்க வெங்காயத்தை பயன்படுத்தலாம். வெங்காயத்தில் காணப்படு பல சிறப்பு மருத்துவ பண்புகள் பைல்ஸ் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தை நறுக்கி, நெய்யில் லேசாக வறுத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல், அதனை வேக வைத்த பின்பும் சாப்பிடலாம். இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதோடு, பைல்ஸ் அறிகுறிகளும் கட்டுப்படுத்தப்படும்.
2. கீல்வாத வலியைக் குறைக்கும் வெங்காயம் (Onion for arthritis pain)
கீல்வாத நோயாளிகளுக்கு வெங்காயத்தைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீல்வாதம் காரணமாக மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், வெங்காயம் சாப்பிடுவதுடன், அதன் சாற்றை வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். வெங்காயச் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து வலி உள்ள இடத்தில் லேசான அழுத்தத்துடன் மசாஜ் செய்யவும்.
மேலும் படிக்க | 25+ வயதான பெண்கள் கண்டிப்பாக டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
3. இருமல் மற்றும் சளிக்கு வெங்காயம் (Onion for cough and cold)
வெங்காயத்தை உட்கொள்வது சளி மற்றும் இருமல் பிரச்சனையை நீக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாறிவரும் காலநிலை காரணமாக சளி, இருமல் அல்லது தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் வெங்காய சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம். இரண்டு ஸ்பூன் வெங்காயச் சாற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்றாகக் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
4. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெங்காயம் (Onion for Diabetes)
உடலில் தொடர்ந்து அதிகரித்து வரும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வெங்காயத்தையும் உட்கொள்ளலாம். மேலும் இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒரு வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் வெங்காயத்தை தினமும் சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
5. சரும நோய்களை குணப்படுத்தும் வெங்காயம் (Onion for skin disease)
வெங்காயச் சாறு தோல் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கவும் பயன்படுகிறது. வெங்காய சாற்றில் உள்ள பல சிறப்பு கூறுகள் சருமத்தில் தோன்று எரிச்சல் உணர்வு, சிவத்தல், அரிப்பு மற்றும் பல பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இரண்டு ஸ்பூன் புதிய வெங்காய சாற்றை எடுத்து, அதில் சிறிது மஞ்சள் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வொரு வீட்டு வைத்தியம் அல்லது பிற தகவல்கள் எந்தவொரு நோய்க்கும் சிகிச்சைக்கு மாற்றாகப் கடைபிடிக்க இயலாது. இந்த வீட்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கடைபிடிக்க விரும்பினால், கண்டிப்பாக ஒருமுறை மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | தினமும் ‘இதை’ செய்தால் இரத்த அழுத்தம் சீராகும்..செய்து பாருங்களேன்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ