‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை அதீத அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் உடல் நலனில் ஆபத்து ஏற்படுமாம். அப்படி, அவர்களுக்கு அதிகமாக கொடுக்க கூடாத உணவு பட்டியல்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
குழந்தைகளுக்கான டயட்:
குழந்தைகளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பெற்றோர்கள் பலர், அவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கவே முனைகின்றனர். குழந்தைகலின் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது அவர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருந்தாலும், அதை அதிகமாகச் சாப்பிடுவது எதிர்பாராத பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்தின் பிற அம்சத்தையும் போலவே, அதில் நாம் ஏற்படுத்தும் சமநிலையும் முக்கியமானதாகும்.
பழச்சாறு:
குழந்தைகள் பல சமயங்களில் பழங்களை அப்படியே உட்கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் மத்தியில், பழங்களின் உட்கொள்ளலை அதிகரிக்க பழச்சாறு கொடுப்பது சரியான வழியாக பலருக்கு தோன்றுகிறது. அவற்றில் சர்க்கரை அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, பல் சிதைவு மற்றும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து காரணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் பழங்களை முழுமையாக குழந்தைகளுக்கு கொடுக்க சொல்லி, மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களின் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமலும் கட்டுப்படுத்தலாம்.
பீனட் பட்டர்:
பாதாம் பட்டர், பீனட் பட்டர் என பலவகையான பட்டர்கள் மார்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இதில் நல்ல கொழுப்புகள், புரத சத்துகள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றனர். ஆனாலும், அவை கலோரி-அடர்த்தியாகவும் உள்ளன. இதை அதிகப்படியாக சாப்பிடுவதால் குழந்தைகள் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி, ஒரு சில பட்டர்களில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் எண்ணெய்கள் சேர்க்கப்படலாம். இதுவும் உடல் நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரையற்ற பட்டர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் என குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | குண்டு குண்டா இருக்குற தொப்பையை 15 நாட்களில் குறைக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்
உலர் பழங்கள்:
உலர் பழங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அடங்கியவையாக இருக்கின்றன. ஆனால் இவற்றில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகளில் அதிகமாக உள்ளன. அதிக அளவு உலர்ந்த பழங்களை உட்கொள்வது அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது வழிவகுக்கலாம். மேலும், உலர் பழங்கள் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிதமான உணவை சாப்பிட, குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். ஸ்நாக்ஸாக சாதாரண பழங்களை கொடுக்க வேண்டும்.
கிரனோலா:
முழு தானியங்களை அடக்கிய ஸ்நாக்ஸ் உணவாக கிரனோலா பார்க்கப்படுகிறது. இவை, இன்ஸ்டண்ட் பேக்கெட்டுகளாகவும் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றில் அதிகப்படியான சர்க்கரை, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்படும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் கிரனோலாவில் இருக்கும் சத்துகள் உடலுக்கு கிடைக்காமலேயே போய் விடுகின்றன. குழந்தைகள் அதிகமாக இதனை எடுத்துக்கொள்வதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 40 வயதுக்கு பின்னரும் நச்சுனு வாழ... இந்த பழத்தின் ஜூஸை அப்பப்ப குடிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ