எடை குறைப்பு குறிப்புகள்: உடல் எடை அதிகரிப்பு பலரை வாட்டி வதைக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இதனால் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்ககும் மோசமான வாழ்க்கை முறையும் உடல் எடை அதிகரிப்பிற்கு பெரும் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுவது, எப்போது வேண்டுமானாலும் தூங்குவது, என எந்த ஒரு முறையும் இல்லாமல் வாழ்க்கை வாழ்வதால், பல முறை பலருக்கு எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. மோசமான வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் பல நோய்களுக்கும் ஆளாகிறீர்கள். அதுமட்டுமின்றி உடலில் உப்பசமும் ஏற்படுகின்றது.
உடல் எடை அதிகமாகத் தொடங்கினால் பெரும்பாலும் நாம் உணவுக் கட்டுப்பாட்டைத் தொடங்குகிறோம், அல்லது உணவைத் தவிர்க்கத் தொடங்குகிறோம். இவ்வாறு திடீரென அதிக உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துகளின் குறைபாடு ஏற்பட்டு வளர்சிதை மாற்றமும் குறையத் தொடங்குகிறது. உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும், எளிய, இயற்கையான வழிகளில் உடல் எடையைக் குறைக்கலாம். இதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்து கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் மூலம் மிக எளிதாக சிறிது காலத்திலேயே ஆரோக்கியமான முறையில் ஐந்து கிலோ எடை குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒரு முறையை பின்பற்றவும்
எடை இழக்க, நீங்கள் ஒரு முறையை ஒழுங்காக பின்பற்ற வேண்டும். ஒரு விஷயத்தை நாம் செய்து அதற்கு பலன் கிடைக்க வேண்டுமானால், அதை நோக்கி தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அதே வழியில் எடையை இழக்கவும் ஒரு சரியான வழிமுறையை பின்பற்ற வேண்டும். ஒரு வடிவத்தை உருவாக்கவும். நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை முழுமையான உணவு (ப்ராப்பர் மீல்) மற்றும் இரண்டு சிறிய உணவுகளை (ஸ்மால் மீல்) சாப்பிட வேண்டும். உங்கள் உணவில் அதிக புரதத்தைச் சேர்க்க வெண்டும். இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவும். மேலும் உங்கள் உணவில் 3-4 மணி நேரம் இடைவெளி வைத்து, தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடுங்கள்.
அதிக தண்ணீர் குடிக்கவும்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் சிறந்த வழி நீரேற்றமாக இருப்பதாகும். உடலில் போதுமான நீர் இருந்தால், உங்களுக்கு பசி குறைவாக இருக்கும். உடல் எடையை குறைக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, தினமும் காலையில் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
நடைபயிற்சி பலனளிக்கும்
தினமும் குறிப்பிட்ட அளவு நடைப்பயிற்சி மேற்கொண்டால், அது கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, நடக்கும்போதும், வியர்வை வெளியேறும் போதும், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும். இதற்காக ஜிம்மில் இரண்டு மணி நேரம் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வாரமும் உங்கள் உடற்பயிற்சி நேரத்தை சிறிது அதிகரிக்கலாம். மேலும், நீண்ட நேரம் ஒரே உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது உங்கள் எடையை மிக விரைவாக குறைக்கும்.
மேலும் படிக்க | மஞ்சள் பால் குடித்தால் இவ்வளவு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!
வெளி உணவை தவிர்க்கவும்
இந்த அசசர வாழ்க்கையில், நாம் அனைவரும் பெரும்பாலும் வெளி உணவையே சாப்பிடுகிறோம். வெளி உணவுகளில் கலோரிகள் மிக அதிகமாக இருப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை அதிகரிக்கும் சில அம்சங்களும் அவற்றில் உள்ளன. ஆகையால் முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்த்து விட்டு வீட்டு உணவை உட்கொள்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். மேலும் சமையலில் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
நல்ல தூக்கம் அவசியம்
உடல் எடையை குறைக்க, மற்ற விஷயங்களைப் போலவே, தூக்கத்தின் நிறைவும் மிகவும் முக்கியமானது. ஒரு நபர் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்குவது இரவு பசியிலிருந்து உங்களை காப்பாற்றும்.
இப்படி வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஐந்து கிலோ வரை எளிதாகக் குறைக்கலாம். இதன் மூலம், உங்கள் உடல் முன்பை விட ஃபிட்டாக மாறும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களின் பிடியிலும் சிக்காமல் இருப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வலுவான எலும்புகள் வேண்டுமா? இந்த பானங்களை உட்கொண்டால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ