கோடைகாலத்தில் வெப்பம் சருமத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும், கோடையில் சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனால் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம். கோடையில் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன்கள் அவசியம், இது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாத்து நமது முகத்திற்குக் கவசமாகச் செயல்படுகிறது. சந்தையில் பல்வேறு வகையான சன்ஸ்கிரீன்கள் உள்ளன, எனவே உங்கள் தோல் வகைக்கு ஏற்ற சரியான SPF உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். மேலும், சன்ஸ்கிரீனை உங்கள் முகத்தில் மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கைகள் மற்றும் கால்களிலும் தடவ வேண்டும், இது சருமத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் உதவுகிறது.
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
கோடையில் நம் உடல் வியர்வையால் அதிக அளவு தண்ணீரை இழக்கிறது, இதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சருமம் வறண்டு போகும். அதனால் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் வறண்ட சருமத் திட்டுகளுக்கு வழிவகுக்காது. கோடையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமத்திற்கு நிவாரணம் மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும். கோடையில், நல்ல மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு, உங்கள் முகத்தை தவறாமல் கழுவுங்கள், அதேசமயம் முகத்தை வேகமாக துடைக்காமல் மென்மையான துணியால் லேசாக ஒத்தி எடுக்கலாம். பின்னர் அதை 3-4 நிமிடங்கள் திறந்த வெளியில் உலர விடவும். இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு வறட்சியையும் குறைக்கும்.
கோடையில் வெளியே செல்லும் போது, சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து முடிந்தவரை முகத்தை மறைக்க முயற்சி செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கண்களுக்கு ஷேட்ஸ் அணியுங்கள், முகத்தை மறைக்குமாறு தொப்பி அணியலாம், தலைக்கு ஸ்கார்ஃப் போன்றவற்றை கட்டிக்கொள்வதன் மூலம் நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு நல்லது, அவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கின்றன. மேலும் முகத்தில் உள்ள கறைகளை அகற்ற உதவுகின்றன. எலுமிச்சை, தயிர், பால், உளுந்து, தக்காளி போன்றவற்றை கொண்டு பாதுகாப்பான முறையில் நாம் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம்.
உங்கள் சருமத்திற்கு எது பொருத்தமானது என்பதை நன்கு ஆராய்ந்து, தயாரிப்புகளில் உள்ள பொருட்களைப் பார்த்து, புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும். லேசான தன்மை, இயற்கையான பொருட்களால் செய்யப்பட்டதா மற்றும் நீண்டகாலம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை கவனித்து பொருட்களை வாங்க வேண்டும். கோடைக்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதம் தேவை இல்லை என்று சில வதந்திகள் உள்ளது, ஆனால் அது தவறு. சருமத்திற்கு நல்ல ஈரப்பதம் தேவை, குறைவான கெமிக்கல்கள் மற்றும் அதிக ஆர்கானிக் பொருட்களைக் கொண்ட மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வேண்டுமா: இரவில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR