இனிப்பு மீதான ஆசையை கட்டுப்படுத்த... ‘இந்த’ புளிப்பு உணவுகள் உதவும்!

சர்க்கரையை அதிகம் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற நாள்பட்ட உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 23, 2023, 05:49 PM IST
  • சர்க்கரையை அதிகம் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • இனிப்பு மீதான ஆசை கட்டுப்படுத்தி சமாளிக்க உதவும் புளிப்பு உணவின் சக்தி.
  • சர்க்கரை மீதான ஆர்வத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழி.
இனிப்பு மீதான ஆசையை  கட்டுப்படுத்த... ‘இந்த’ புளிப்பு உணவுகள் உதவும்! title=

இனிப்பின் மீதான ஆர்வம் என்பது நம்மில் பலருக்கு இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் சிலருக்கு மிக மிக அதிகமாகவே இருக்கும். பலருக்கு மதிய உணவு, இரவு உணவு அல்லது நள்ளிரவு உணவு என எந்த வேளையிலும் உணவுக்கு பிறகு, இனிப்பு எதையும் சாப்பிடாமல் சாப்பிட்ட திருப்தி கிடைக்காது. எப்போதும் ஒரு சாக்லேட் கேக், சுவையான இனிப்புகள் என ஏதாவடது ஒன்று வேண்டும். இந்த இனிப்பு மீதான ஆர்வம் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் தோன்றினாலும், தொடர்ந்து சர்க்கரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற நாள்பட்ட உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த சர்க்கரை மீதான ஆர்வத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது அவசியம். அதற்கும் எங்களிடம் ஒரு தீர்வு இருக்கிறது! இனிப்பு மீதான ஆசை கட்டுப்படுத்தி சமாளிக்க புளிப்பு உணவின் சக்தியைப் பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் உதவும் என நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இருப்பினும், உங்கள் இனிப்பு பசியை புளிப்பு உணவுடன் மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் நீங்கள் இதனை தொடர்ந்து  முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்! சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்துவதில் புளிப்பு சுவை கொண்ட உணவுகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்!

உங்கள் பசியை அடக்க உதவும் புளிப்பு சுவை கொண்ட உணவுகள்

புளிப்பு சுவை கொண்ட உணவுகள் ஒரு தடையாக செயல்பட்டு உங்கள் பசியை அடக்க உதவுகிறது.  புளிப்பு  சுவை கொண்ட உணவை உண்பது, உங்கள் சர்க்கரை பசியைக் குறைக்கும் அதே வேளையில், நீங்கள் வயிறு நிறைவாக உணரலாம். இதனால், சர்க்கரை தின்பண்டங்களின் மீதான நாட்டம் குறையும். உடல் பருமனும் குறையும் (Weight Loss Tips).  எனவே, உங்கள் உணவில் புளிப்பு உணவுகளை சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை சமன் செய்யும் புளிப்பு உணவு

புளிப்பு உணவு உண்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்க உதவும். புளிப்பு உணவுகள், பசியை கட்டுப்படுத்தி, அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க உதவுகிறது. புளிப்பு உணவுகள் உங்கள் சுவை மொட்டுகளின் கவனத்தை சர்க்கரை மீதான ஈடுபாட்டில் இருந்து திசை திருப்ப உதவுகிறது.

மேலும் படிக்க | வயசானாலும் வலிமையும் சுறுசுறுப்பும் மாறாம இருக்க... ‘சில’ புரதம் நிறைந்த உணவுகள்!

உணவில் சேர்க்க வேண்டிய சில புளிப்பு உணவுகள்

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது மற்றும் உங்கள் இனிப்பு மீதான ஆர்வத்தை குறைத்து சமநிலைப்படுத்த உதவும் ஒரு சுவையான புளிப்பை வழங்குகிறது.

பெர்ரி: ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஒரு மகிழ்ச்சி உணர்வை கொடுக்கும் புளிப்பு உள்ளது. இது சர்க்கரை தின்பண்டங்களுக்கு மாற்றாக இருக்கும்.

தயிர்: எலுமிச்சையுடன் கூடிய கிரேக்க தயிர் அல்லது பெர்ரிகளுடன் கூடிய  தயிர் ஒரு திருப்திகரமான மற்றும் புளிப்பான சிற்றுண்டியாக இருக்கும்.

ஊறுகாய்: எலுமிச்சை, மாங்காபோன்ற புளிப்பு காய்கறிகளால் செய்யப்பட்ட ஊறுகாய்கள் புளிப்பு சுவை நிறைந்திருப்பதோடு மட்டுமல்ல, கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், அவை பசியைக் கட்டுப்படுத்த சிறந்த தேர்வாக அமைகின்றன.

வினிகர்: சாலட் டிரஸ்ஸிங் போன்ற உங்கள் உணவில் வினிகரை சேர்ப்பது புளிப்பு சுவையை கொடுத்து மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.

புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்: இட்லி, பனீர், பாலாடைக்கட்டி,  தயிர், சீஸ், ஊறுகாய், சார்க்ராட், கிம்ச்சி, கெஃபிர், கொம்புச்சா, டெம்பே போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை நம்முடைய தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். சார்க்ராட், கிம்ச்சி மற்றும் கொம்புச்சா போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் புளிப்பு மட்டுமல்ல, உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் புரோபயாடிக்குகளால் நிரம்பியுள்ளன.

உணவில் சமநிலையான ஊட்டசத்துக்கள் 

உணவில் அனைத்து ஊட்டசத்துக்களும் கொண்ட சமநிலை இருக்க வேண்டும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகப்படியான சர்க்கரை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக எந்த உணவையும் தவிர்ப்பது ஒரு தீர்வாகாது. புளிப்பு உணவுகள் அதிக அளவிலான சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்த செயல்படுகின்றன. ஏனெனில் அவை வயிறு நிறைந்த திருப்தி உணர்வை உருவாக்குகின்றன. இது உங்கள் மூளைக்கு நீங்கள் வயிறு நிறைந்தது என்ற சமிக்ஞையை அளிக்கிறது. இது அதிக உணவு, குறிப்பாக இனிப்பு விருந்துகளுக்கான விருப்பத்தை குறைக்கும். இருப்பினும், உகந்த ஆரோக்கியத்தை அடைவதற்கு அனைத்து ஊட்டசத்துக்களையும் கொண்ட சீரான உணவைப் பின்பற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை சட்டுபுட்டுன்னு குறைக்கனுமா? இந்த ‘ஜெல்’ இருக்க கவலை ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News