Herbal Leaves: நொச்சி இலையின் அற்புத மருத்துவ பயன்கள்....!

நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் முக்கியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என சில வகைகள் உள்ளன.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2021, 04:06 PM IST
  • நொச்சி இலையின் அற்புத மருத்துவ பயன்கள்
  • வீக்கம் குறையும்
  • கீல் வாதத்தைப் போக்கும்
Herbal Leaves: நொச்சி இலையின் அற்புத மருத்துவ பயன்கள்....! title=

புதுடெல்லி: நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் முக்கியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என சில வகைகள் உள்ளன.  

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்பபடும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாகச் சேர்க்கப்படுகின்றது.

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் பழக்கம் தற்போதும் கிராமங்களில் தொடர்கிறது குறிப்பிடத்தக்கது.  இயற்கை மருத்துவத்தில் நொச்சி பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, சருமப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க நொச்சி பயன்படுத்தப்படுகிறது. 

Also Read | குறட்டை ஏற்படுவதற்கான காரணம் என்ன? சுலபமான தீர்வு இதோ!

குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கும் திறன் கொண்ட நொச்சி, மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்சனைகள், இயக்குநீர் குறைபாடுகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கும் தீர்வாகிறது.

நொச்சிச் செடி இருக்கும் இடங்களில் நோய்களைப் பரப்பும் கொசுக்களும் பூச்சிகளும் வராது. நொச்சி துவர்ப்பு மற்றும் காரச் சுவை கொண்டது. வெப்பத் தன்மையுடையதாக இருந்தாலும், அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும் என்பது இதன் சிறப்பம்சம். மாதவிலக்கை தூண்டும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.

ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.
ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், தலை பாரம் குறையும்.

READ ALSO | பார்லி சூப்பில் இத்தனை மருத்துவ பயன்களா!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News