நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும் வைட்டமின் எது? தயமின் குறைபாட்டின் அறிகுறிகள்

Thiamin Defeciency Facts: உடலில் இந்த வைட்டமின் குறைவினால் நினைவாற்றல் குறையும், மூளை பாதுகாப்பாக இருக்க இவற்றை சாப்பிடுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2023, 11:27 PM IST
  • தியாமின் குறைபாடு நரம்புகளை பாதிக்கும்
  • வைட்டமின் பி1 குறைபாடு காரணங்கள்
  • வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்
நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தும் வைட்டமின் எது? தயமின் குறைபாட்டின் அறிகுறிகள் title=

வைட்டமின் பி1 குறைபாடு: உடலில் வைட்டமின் பி1 குறைவதால் நினைவாற்றல் குறையும். இதை எப்படி சரி செய்வது என்று தெரிந்துக் கொண்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்  நமது நினைவாற்றலை கூர்மைப்படுத்த நமது மூளைக்கு தேவையான சத்துக்கள் தேவை. இந்த ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்ய, தொடர்ந்து பச்சை இலை காய்கறிகள், பருவகால பழங்கள், கீரைகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். சில வைட்டமின்கள் நினைவாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இதில் வைட்டமின் பி1 முக்கியமான ஒன்று. 

தயமின் (Thiamin) என்னும் உயிர்ச்சத்து பி1, உயிர்ச்சத்து பி குழுமத்தில் உள்ள நீரில் கரையக்கூடிய, கந்தக தொகுதியினைக் கொண்ட, தையோ வைட்டமின் ஆகும். இந்த உயிர்ச்சத்து உணவில் இல்லாதபோது நரம்பியல் சார்ந்த சிதைவுகளை உருவாக்குகிறது.

நினைவாற்றலை மேம்படுத்த எந்தெந்த வைட்டமின்கள் தேவை? 

உடலில் வைட்டமின் பி1 குறைபாடு உங்கள் மூளையை பாதிக்கும். இந்த வைட்டமின், தயமின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமின் முக்கியமாக வளர்சிதை மாற்றம் மற்றும் தசை செயல்பாடுகளை மேம்படுத்த அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் தயமின் குறைபாட்டால் (Vitamin B1 Deficiency), பல வகையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் படிக்க | Best Juices: ரத்தசோகையா? ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆரோக்கியமான காய்கனி சாறுகள்

வைட்டமின் பி1 குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
உடலில் வைட்டமின் பி12 குறைவதால், பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம் என்றாலும், அவற்றில் முக்கியமான சில...

பெரிபெரி நோயின் அபாயம் அதிகரிக்கும்.
தியாமின் குறைபாடு, நரம்பு தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
வைட்டமின் பி1 குறைபாட்டால் எடை குறையும்
பசியின்மைக்கு தியாமின் குறைபாடு காரணமாகும்
சிக்கலான சூழ்நிலைகளில் குழப்பம் அதிகமாகும்
நினைவாற்றல் பிரச்சினைகள் 

உடலில் வைட்டமின் பி 1 குறைபாட்டை எவ்வாறு சீர்செய்வது?
சூரியகாந்தி விதைகள்: உடலுக்கு வைட்டமின் பி1 சத்தை வழங்க சூரியகாந்தி விதைகளை உட்கொள்ளலாம். 100 கிராம் சூரியகாந்தி விதைகளில் இருந்து சுமார் 0.106 மி.கி வைட்டமின் பி1 பெறலாம் என்பதால், சூரிய காந்தி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | தனியா: சுகர் லெவெல் முதல் இரத்த அழுத்தம் வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம், இப்படி உட்கொள்ளலாம்

பச்சை பட்டாணி: வைட்டமின் பி1 குறைபாட்டை போக்க, பச்சை பட்டாணி சாப்பிடுங்கள். 100 கிராம் பச்சை பட்டாணியில் இருந்து சுமார் 0.282 mg வைட்டமின் B1 ஐ கிடைக்கும்.

இறைச்சி, மீன்: இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவது வைட்டமின் பி1 சத்தை போதுமான அளவு தந்து ஆரோக்கிய நன்மையை பயக்கும்.

முழு தானியங்கள்: வைட்டமின் பி1 முழு தானியங்களிலும் காணப்படுகிறது. கம்பு, தினை, ராகி போன்ற தானியங்களை உட்கொள்வது வைட்டமின் பி1 எனப்படும் தியாமின் சத்தை போதுமான அளவுக்கு உடலுக்கு தருகிறது.

நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | லிபிடோவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்! இது ஆண்களின் மனசுக்கு நெருங்கிய விஷயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News