உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் கொய்யாபழம்! இந்த முறையில் சாப்பிடுங்க!

கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்பார்வையைப் பராமரிக்கவும், கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு ஏற்படுவதையும் தடுக்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2023, 06:33 AM IST
  • கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
  • கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை சரிசெய்கிறது.
  • கொய்யாப்பழத்தில் 21% வைட்டமின் ஏ சத்து உள்ளது.
உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் கொய்யாபழம்! இந்த முறையில் சாப்பிடுங்க!

பலரது வீடுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய கொய்யாப்பழம் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் இப்பழம் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.  இந்த பழத்தில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது மற்றும் ஒவ்வொரு 100 கிராம் கொய்யாப்பழத்திலும் 18 கிராம் தாதுக்கள் உள்ளன.   உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை காட்டிலும் கொய்யாப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.  கொய்யாப்பழத்தில் 21% வைட்டமின் ஏ சத்து உள்ளது, இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.  இதில் 20% ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி-9 உள்ளது, இது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும், நரம்பு குழாய் சேதத்தையும் தடுக்கிறது.  கர்ப்பிணி பெண்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | உங்களுக்கு மூட்டு வலியா? அப்போ தினமும் இந்த அற்புதமான தேநீர் குடிங்க

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.  வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நல்ல பார்வையை பராமரிக்க உதவுகிறது, மேலும் இது சளி மற்றும் பிற வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
அன்னாசிப்பழத்தை விட கொய்யாப்பழத்தில் நான்கு மடங்கு நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.  இளஞ்சிவப்பு நிறக் கொய்யாப்பழத்தில் காணப்படும் லைகோபீன் எனும் பொருள் புற ஊதாக் கதிர்களினால் சருமத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க செய்கிறது.  மேலும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் அபாயம் குறைவதாக கூறப்படுகிறது.

கொய்யாப்பழம் கூடுதலாக உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.  உடலில் கொலஸ்டராலின் அளவு குறைவதால் இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கிறது.  கொய்யாப்பழத்தில் அதிகளவு நார்சத்து இருப்பதால், இதனை சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமடையும்.  கொய்யாப் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வையைப் பராமரிக்கவும், கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு ஏற்படுவதையும் தடுக்கிறது.  கொய்யாவில் உள்ள மெக்னீசியம் சத்து தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்த உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.  கொய்யா உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையை குறைக்க உதவுகிறது.  இதிலுள்ள பல வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் சருமத்தை பாதுகாத்து, வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது.

மேலும் படிக்க | உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க 2 ரூபாய் இருந்தா போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News