பாடாய் படுத்தும் மூட்டு வலியில் இருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

மூட்டுகளில் வலி எடுத்த உடனே, பலர் வலி நிவாரண மருந்துகளை தேடிச் செல்கின்றனர். இது உடனடி நிவாரணம் அளித்தாலும் பல நேரங்களில் பக்க விளைவுகளையும் கொடுக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2023, 11:34 PM IST
  • மூட்டு வலியை வீட்டு முறை சிகிச்சைகள் மூலமாகவே நாம் சரி செய்து கொள்ளலாம்.
  • குளிர்காலத்தில் பலருக்கு மூட்டு வலி பாடாய் படுத்தும்.
  • ஆப்பிள் சைடர் வினிகர் மூட்டுகளில் உள்ள கடுமையான நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
பாடாய் படுத்தும் மூட்டு வலியில் இருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்தியங்கள்! title=

மூட்டுகளில் வலி எடுத்த உடனே, பலர் வலி நிவாரண மருந்துகளை தேடிச் செல்கின்றனர். இது உடனடி நிவாரணம் அளித்தாலும் பல நேரங்களில் பக்க விளைவுகளையும் கொடுக்கிறது. நீடித்த, நாள்பட்ட மூட்டு வலிக்கு மருந்து எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளது என்றாலும், மூட்டு வலியை வீட்டு முறை சிகிச்சைகள் மூலமாகவே நாம் சரி செய்து கொள்ளலாம். மெது மெதுவாக மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து விடலாம்.

குளிர்காலத்தில் பலருக்கு மூட்டு வலி பாடாய் படுத்தும். இந்த வலிக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க கூடுதல் கவனம் தேவை. மூட்டு வலியிலிருந்து விடுபட வேண்டுமானால், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் வியக்கத் தக்க பலன்களை பெறலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் ஆல்கலைன் பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மூட்டுகளில் உள்ள கடுமையான நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. வலி ஏற்படும் போது மூட்டுகளில் ஆப்பிள் சைடர் வினிகர் தடவினால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். அதே போல, இரண்டு கப் வெந்நீரில், இரண்டு டீ ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்து வந்தாலும் மூட்டு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கடுகு எண்ணெய் மிகவும் வியக்கத் தக்க வகையில் நிவாரணம் அளிக்கும். குளிர்காலத்தில் மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள், பூண்டுடன் 2 முதல் 3 ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடாக்கி, பின், இந்த எண்ணெயைக் கொண்டு வலி இருக்கும் இடங்களில் மசாஜ் செய்யவும்.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

இஞ்சி

இஞ்சியை துருவி அல்லது தட்டி தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வடிகட்டிய பின், அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதன் மூலம் மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் பலருக்கு தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற விரும்பினால், தேங்காய் எண்ணெய் இதற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளதால், முழங்கால் வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், எலும்புகள் வலுவடையும். பாதாம் எண்ணெயை லேசாக வெதுவெதுப்பாக சூடாக்கி, இந்த எண்ணெயைக் கொண்டு மூட்டுகளில் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நிறைய நிவாரணம் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய்

மூட்டு வலிக்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. தசைப்பிடிப்பு, வலி இருந்தாலும், இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் அதிக மாய்ஸ்சரைசர் உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், மூட்டு வலிக்கு நிறைய நிவாரணம் கிடைக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாமிரம் போன்றவை நிறைந்துள்ள இந்த எண்ணெய் சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News