Health Tips: அல்சர்? விடுபட எளிமையான வழிமுறைகள் இதோ…

அகத்திக் கீரையும், அத்திக் காயும் அல்சருக்கு அற்புதமான மருந்துகள் தெரியுமா? அல்சரை ஓட விரட்டும் சுலப வழிகள் உங்களுக்காக...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2021, 10:48 AM IST
  • அல்சரை ஓட விரட்டும் சுலப வழிகள்
  • அகத்திக் கீரை வயிற்று புண்களை ஆற்றும்
  • அத்திக் காயுடன் பாசிப் பருப்பு கூட்டு சேர்ந்தால் அல்சர் அம்பேல்
Health Tips: அல்சர்? விடுபட எளிமையான வழிமுறைகள் இதோ… title=

ஆரோக்கியமான உடலே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படை ஆகும். உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், அது ஒரு கட்டத்தில் மிகப் பெரிய சிக்கலாக மாறிவிடும். நேரம் தவறி உண்பது உட்பட இன்று மாறிப் போன உணவுப் பழக்கங்கள் நமக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அதில் முக்கியமானது அல்சர். அல்சர் என்றால் என்ன? நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல் கிறோம், சிறுகுடலின் முன்பகுதியில் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர் தான்.  

அல்சர் என்பவை உடலில் எங்கு வேண்டுமானாலும் வரக்கூடிய புண்கள். உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை விட உள்ளே பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்கள் பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புண்களை கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். 

அல்சரை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம். இரைப்பை அல்சர்(gastric ulcers), ஓசோஃபேஜியல் அலசர் (oesophageal ulcers) மற்றும் டியோடெனல் அலசர் (duodenal ulcers) என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகைகளின் அறிகுறிகள் பொதுவாக ஒன்று போலவே இருக்கின்றன. 

Also Read | தினம் ஒரு வாழைப்பழம், நன்மைகள் என்ன

அல்சர் ஏற்பட்டால், வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உட்பட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.

அல்சர் இருப்பது தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் நமது உணவு முறைகளில் சில மாறுதல்களை செய்ய வேண்டும்.
பாலுடன் இரண்டு மூன்று வாழைப்பழங்களையும் சாப்பிடலாம். பச்சை வாழைப்பழம் அல்சருக்கு அருமருத்தாக செயல்படும். 

நெல்லிக்காய் சாறு அல்சருக்கு நல்ல நிவாரணியாக செயல்படும். அதே போல், வில்வ பழங்களும் நல்ல பலனைத் தரும். குளிர்ந்த பாதாம் பால் குடிப்பது அல்சரினால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

மாதுளம் பழ ஜூஸ் குடிப்பது அல்சருக்கு அருமையான நிவாரணம் கொடுக்கும் என்றால்,அகத்திக் கீரை புண்களை விரைவில் ஆற்றும்.  பாசிப் பருப்புடன் அத்திக் காயை கூட்டாக சமைத்து உண்டால் அல்சர் புண்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும். உலர்ந்த திராட்சைப் பழங்களை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.

Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News