Health Alert! வந்துக் கொண்டேயிருக்கிறது கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்

கொரோனாவை விட வீரியமான மற்றுமொரு வைரஸ் உலகை தாக்க தயாராகிவிட்டது என்ற அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2021, 02:31 PM IST
  • கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்
  • கோழிகளிடமிருந்து ப்ரவௌம் ஆபத்தான வைரஸ்
  • இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு H5N8 என்று பெயரிடப்படுள்ளது
Health Alert! வந்துக் கொண்டேயிருக்கிறது கொரோனாவை விட ஆபத்தான வைரஸ் title=

உலகம் முழுவதும் கொடிய கொரானா தொற்றுநோய் நீண்ட காலமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 2019 இன் பிற்பகுதியில் பிறந்த இந்த வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வலுவான வடிவத்தை எடுத்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகில் உலா வந்து மில்லியன் கணக்கான உயிர்களை பறித்துவிட்டது.

இப்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் கோவிடை பரப்பும் வைரசீன் பரவல் குறையவில்லை. ஆனால், அதைவிட வீரியமான மற்றுமொரு வைரஸ் உலகை தாக்க தயாராகிவிட்டது என்ற அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி அச்சங்களை அதிகரித்துள்ளது. 

கோழிகளிடமிருந்து ஆபத்தான வைரஸ் பரவப் போகிறது என்று கூறப்பட்டு வருகிறது, அதிலும், கோழிப் பண்ணையில் எட்டு மிகவும் ஆபத்தான வைரஸ்கள் வளர்ந்து வருவதாகவும், இந்த வைரஸ்கள் பரவினால் அதன் பாதிப்பு கொரோனா தொற்றுநோயை விட மோசமாக இருக்கும் என்ற தகவல் மனவுறுதியை குலைக்கிறது.

கடந்த ஆண்டு ரஷ்யாவில் லட்சக்கணக்கான கோழிகள் திடீரென இறக்க ஆரம்பித்தது நினைவிருக்கலாம். அந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி இருந்தது. இந்த காய்ச்சல், கொரோனாவை விட வேகமாக மனிதர்களிடையே பரவுகிறது. இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு H5N8 என்று பெயரிடப்பட்டது. தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த தொழிலாளி ஒருவருக்கு H5N8 தொற்று ஏற்பட்டது.

ALSO READ | கோவிட் டோ என்றால் என்ன? வந்தால் சிகிச்சை என்ன?

அதையடுத்து, அதே தொழிற்சாலையின் மேலும் ஏழு தொழிலாளர்களும் இந்த வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் இருந்தன. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமாகிவிட்டனர். ஆனால் இந்த கொடிய வைரஸைத் தடுக்க 9 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன. இந்த கோழிகளை பொதுமக்களுக்கு வழங்கியிருந்தால், வைரஸின் பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
 
தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும்

ரஷ்யாவில் கோழிகளுக்குள் பறவை காய்ச்சல் ஏற்பட்ட சம்பவம் குறித்து WHO க்கு தெரிவிக்கப்பட்டது, ஆனால் அந்த நேரத்தில் WHO கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மூழ்கியிருந்தது. இதற்கிடையில், ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை நுகர்வோர் ஆலோசகர் (Consumer Adviser of the Russian Federation) அன்னா போபோவா, உலகின் விஞ்ஞானிகள் எச் 5 என் 8 வைரசுக்கான தீர்வை விரைவில் கண்டறிய வேண்டும் என்று கூறினார்.

இல்லாவிட்டால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும். அப்படி ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால், கொரோனா ஏற்படுத்தியதை விட மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது,  கண்டறியப்பட்டுள்ள பறவைக் காய்ச்சலின் எட்டு வகைகளும் மனிதர்களை பாதிக்கக்கூடியவை… 

இந்த அச்சங்களுக்கு மத்தியில் அண்மையில், சீனாவைச் சேர்ந்த 48 பேருக்கு H5N8 பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு மிகவும் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கோழிப்பண்ணைகளில் வேலை செய்து வந்தனர். அவர்களில் பாதி பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News