ஆப்பிள் சாப்பிடுங்கள் ஆனால் இந்த நேரத்தில் சாப்பிடுங்கள்

ஆப்பிள் பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பது குறித்த தகவல்கள்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 20, 2022, 03:25 PM IST
  • ஆப்பிளை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது
  • மாலையிலோ, இரவிலோ சாப்பிட்டால் செரிமான பிரச்னைக்கு வாய்ப்பு
ஆப்பிள் சாப்பிடுங்கள் ஆனால் இந்த நேரத்தில் சாப்பிடுங்கள் title=

ஆப்பிள் பழம் ஆரோக்கியமான பழ வகைகளில் ஒன்று. குறிப்பாக தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான கேடும் வராது என்கின்றனர் மருத்துவர்கள். அதன்படி பலரும் தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது சரியானதுதான் என்றாலும் எந்த நேரத்தில் ஆப்பிள் பழத்தை சாப்பிட வேண்டும் என்பதை பலர் கண்டுகொள்வதே இல்லை.

எப்போதுமே ஆப்பிள் பழத்தை காலையில்தான் சாப்பிட வேண்டும். செரிமான பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு ஆப்பிளை காலையில் சாப்பிடலாம்.அதனுடைய தோல் பகுதியில் பெக்டினும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அவை உடலுக்கு சத்து கொடுப்பதோடு மட்டுமின்றி குடலை சீராக இயங்க வைக்கும். இதனால் அன்றைய நாள் ஆரோக்கியமாக தொடங்கும்.

மேலும் படிக்க | தொண்டை வலியைப் போக்கும் சூப்பர் தேநீர்கள்: தேநீரின் திகட்டாத மாயம்

ஆப்பிள் தோலில் இருக்கும் பெக்டினானது உடலில் இருக்கு லாக்டிக் அமிலத்தை பத்திரமாக பார்த்துக்கொள்கிறது. அதுமட்டுமின்றி பெருங்குடலுக்குய் நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அது வளர்த்துவிடுகிறது.அதேபோல் காலையில் ஆப்பிளை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னைகள் குறையும். நச்சுக்களையும் வெளியேற்றும்.  

Apple

காலை  மட்டுமின்றி பிற்பகலும் ஆப்பிள் சாப்பிடுவதற்கு உகந்த நேரமாகும். அதேசமயம் மாலையிலோ, இரவிலோ ஆப்பிள் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பகல் நேரத்தில் செரிமானத்திற்கு உதவி புரியும் ஆப்பிள் இரவு நேரத்தில் அதற்கு எதிர் நிலையில்  திரும்பி செரிமானத்திற்கு பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வாயு தொல்லை, குடல் இயக்க பிரச்னை உள்ளிட்டவையும் ஏற்படும்.

மேலும் படிக்க | Weight Loss: கொத்தமல்லி பானத்தை குடித்தால், கொழுப்பு ஓடியே போய்விடும்

எனவே ஆரோக்கியமான பழத்தை கண்ட நேரத்தில் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வதைவிட உகந்த நேரத்தில் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News