பருவ மாற்றத்தால் வரும் காய்ச்சல்: மழைக்காலம் பல வித நோய்களுக்கு அழைப்பு விடுக்கிறது. நோய்களை பரப்பும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இந்த பருவத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இதன் காரணமாக நோய்கள் வேகமாக பரவுகின்றன. இந்த நேரத்தில் ஜலதோஷம் வருவது சகஜமாகும். ஆனால் காய்ச்சல் சில சமயம் இன்னும் பல பிரச்சனைகளை வரவழைக்கிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பிரச்சனைகளும் அதிகரிக்கக்கூடும். புதிய காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மழைக்காலத்தில் மிக வேகமாக செயல்படுகின்றன.
இந்த காலத்தில் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால், மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன என்பதையும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காய்ச்சலைத் தவிர்க்கலாம் என்பதையும் அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.
அறிகுறிகள் என்ன?
இந்தப் பருவத்தில் இருமல், சளி, கரகரப்பு, வாந்தி, வயிற்றுவலி போன்ற காய்ச்சல் அறிகுறிகளைக் கண்டால், அலட்சியமாக இருக்க வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகவும்.
என்ன சாப்பிடலாம்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அளிக்கின்றன. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே சளி பிரச்சனை இருந்தால், குளிர்ந்த பழங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- அசுத்த நீரைக் குடிப்பதே நோய்க்கு மிகப் பெரிய காரணமாகும். ஆகையால், தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
- உணவில் குளிர்ச்சியான பொருட்களுக்கு பதிலாக சூடான பொருட்களை அதிகம் உட்கொள்ளவும். இருப்பினும், அதிக காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம்.
- மஞ்சள், இஞ்சி, கிராம்பு, ஓமம், பெருங்காயம், வெல்லம் போன்ற சூடான பொருட்களை உணவில் கலந்து கொள்ளவும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இந்த காய்களை சாப்பிட கூடாது! ஏன்?
அதிக திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்
- தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.
- தினமும் பழச்சாறு குடிக்கவும். பழச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
- துளசி இஞ்சி போட்ட தேநீரை குடிக்கலாம்.
- வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால், எலுமிச்சை-தண்ணீர் அல்லது எலக்ட்ரோலின் கரைசலை குடிக்கவும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
- உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- தினமும் பூண்டு சாப்பிடுங்கள். அதில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது ஜலதோஷம் மற்றும் சளி ஆகியவற்றில் ஒரு நன்மை பயக்கும் காரணியாகும்.
- ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை உண்ணுங்கள்.
- தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவையும் நல்லது.
என்ன சாப்பிடக்கூடாது?
- குளிர்சாதனப்பெட்டியில் வைத்த குளிர்ந்த உணவை உண்ணக் கூடாது.
- பழைய உணவிலும் நோயை உண்டாக்கும் பாக்டீரியா மறைந்திருக்கும். எனவே, பழைய உணவைத் தவிர்க்க வேண்டும்.
இந்த வழியில் எச்சரிக்கையாக இருக்கலாம்
- வெப்பத்தால் காய்ச்சலைப் பரப்பும் கிருமிகள் நீங்கும். மீண்டும் மீண்டும் வேவு பிடிப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- உங்களுக்கு சளி, இருமல், தும்மல் பிரச்சனை இருந்தால், தும்மலின் போது கண்டிப்பாக கைக்குட்டை அல்லது டிஷ்யூவைப் பயன்படுத்துங்கள்.
- முடிந்தால் சானிடைசரைப் பயன்படுத்தவும். இல்லையெனில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கைகளைக் கழுவவும்.
- வீட்டில் தினமும் வேப்பம்பூ புகை போடுங்கள். இதனால் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அழியும். கிருமிகளும் இறக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | Flaxseed Benefits: பல வித நோய்களை ஓட ஓட விரட்டும் ஆளி விதைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ