ஆளிவிதையின் ஆரோக்கிய நன்மைகள்: நம்மில் பலர் நம் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறோம். இதற்காக சரியான உடற்பயிற்சிகளுடன் ஆரோக்கியமான உணவையும் நாடுகிறோம். அப்படிப்பட்ட உணவுகளில் ஆளிவிதைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது தோற்றத்தில் சிறியதாக தோன்றலாம், ஆனால் இதில் உள்ள பயன்கள் ஏராளம். ஆளிவிதைகள் பொதுவாக தூளாக அரைக்கப்பட்டு பின்னர் உட்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' ஆளி விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகிறார்.
ஆளி விதைகளின் நன்மைகள்
1. ஆளி விதைகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக அறியப்படுகின்றன. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். அதே நேரத்தில் இரத்த சர்க்கரை அளவையும் இதன் மூலம் குறைக்கலாம்.
2. வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை ஆளி விதைகளில் ஏராளமாக காணப்படுகின்றன. அவை உடலின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
3. இந்த விதைகளில் பைட்டோ கெமிக்கல்களும் ஏராளமாக காணப்படுவதால், பெண்களுக்கான ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்.
4. ஆளி விதைகளை இடையிடையே தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறைகிறது.
5. ஆளி விதைகளின் உதவியுடன், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். மேலும் நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமல் போக்கும் அற்புத பானங்கள்
6. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆளிவிதைகள் மிகவும் உதவியாக இருக்கும்.
7. லிங்கன் என்று அழைக்கப்படும் ஒரு வித ரசாயனம் ஆளி விதைகளில் காணப்படுகின்றது. இது புற்றுநோய் போன்ற பிற கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
8. இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமது உடலை பல வகையான தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
9. மெனோபாஸ் காலத்தில் ஆளிவிதைகள் ஹார்மோன் மாற்று சிகிச்சையாக (Hormone Replacement Therapy) செயல்படுகின்றன.
10. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆளி விதைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் இது வயிற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஏலக்காய் பாலின் மோசமான விளைவுகள்! அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் கெடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ