உடல் இளைச்சு தொந்தி இல்லாம சிக்குன்னு இருக்க வெண் பூசணியை இப்படி சாப்பிடுங்க! சூப்பர் எஃபக்ட்

Health Benefits Of Ash Gourd: அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி எண்ணிக்கை! வெள்ளைப் பூசணியின் அசர வைக்கும் மருத்துவ குணங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 6, 2023, 07:20 AM IST
  • தொந்தி கொழுப்பை குறைக்க வெள்ளைப் பூசணி இருக்கே!
  • இடுப்பு சுற்றளவை குறைக்க வெண் பூசணி ஜூஸ்
  • மலச்சிக்கலுக்கு வெள்ளைப் பூசணி பச்சடி
உடல் இளைச்சு தொந்தி இல்லாம சிக்குன்னு இருக்க வெண் பூசணியை இப்படி சாப்பிடுங்க! சூப்பர் எஃபக்ட் title=

கொழுப்புச்சத்தே இல்லாத வெண் பூசணி கலோரிகள் குறைந்த, நீர்ச் சத்து மற்றும் ஊட்ட சத்து மிகுந்த காய்கறியாகும். மெழுகு பூசணி அல்லது சீன தர்பூசணி வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகளின் நல்ல மூலமாகும், இது செல் சேதம் மற்றும் வகை 2 நீரிழிவு நோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். வெண் பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகள் மற்றும் இலைகளும் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

வெள்ளை பூசணிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்
வெள்ளைப்பூசணியில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. ஆய்வுகளின்படி, வெள்ளை பூசணி, வகை 2 நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இதிலுள்ள ஆரோக்கியமான நார்ச்சத்து, கரோட்டின் (புரோ-வைட்டமின் ஏ), பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை வழங்குகிறது.

எனவே வெண் பூசணியை அடிக்கடி உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நமது ரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வைட்டமின் சி இருப்பதால், வெள்ளைப் பூசணி ஒரு சிறந்த நோயெதிர்ப்பு ஊக்கியாகும். கணிசமான அளவில் துத்தநாகத்தையும் கொண்டுள்ளது இந்த அபூர்வக்காய், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட சத்தான காய்.

இதய ஆரோக்கியம்
பூசணிக்காயில் மிகக் குறைந்த அளவு மட்டுமே கொலஸ்ட்ரால் உள்ளதால், உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும், பூசணிக்காயை வேக வைத்து உண்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்ல ஊக்கமளிக்கும். அதிக நார்ச்சத்து இருக்கும் சாம்பல் பூசணிக்காயை உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதன் மூலம் இருதய நோய்களைத் தடுக்கிறது.

மேலும் படிக்க | க்ரீன் டீ தெரியும்... அது என்ன ப்ளூ டீ? - புற்றுநோய் முதல் எடை குறைப்பு வரை - அட்டகாசமான நன்மைகள்!

எடை இழப்பை துரிதப்படுத்துகிறது
அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி எண்ணிக்கை கொண்டிருக்கும் வெள்ளைப்பூசணி, எடை இழப்புக்கு ஒரு பயனுள்ள காய் ஆகும். வெள்ளைப் பூசணிக்காயை உட்கொள்ளும்போது, பசி விரைவில் அடங்கிவிடும். அதுமட்டுமல்ல, தசைக் கட்டமைப்பை ஊக்குவிப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது என வெள்ளைப்பூசணியில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

அல்சரை குணப்படுத்துகிறது
பெப்டிக் அல்சர் என்பது வயிறு அல்லது குடலின் திசுப் புறணியை சிதைக்கும் ஒரு கோளாறு ஆகும். ப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதன் மூலம் சாம்பல் பூசணிக்காய் குடற்புண்களைத் தடுப்பதால், வயிற்றில் உருவாகும் அசிடிடி எனப்படும் அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது.

நச்சுக்களை நீக்கும் பூசணிக்காய்
நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், உடல் சூட்டை தணித்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் உள் உறுப்புகளை சமநிலைப்படுத்துகிறது. இது டயாரியா, மலச்சிக்கல், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTI), சிறுநீரக கற்களை அகற்றுதல், சிறுநீரக செயல்முறையை ஒழுங்குபடுத்துதல், குடல் மற்றும் சிறுநீர்ப்பை இயக்கங்களை உறுதிப்படுத்த உதவுகிறது.

கண் கோளாறுகளை மட்டுப்படுத்தும் பூசணி
வெள்ளை பூசணியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், விழித்திரை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. வயதாகும்போது, அவர்களின் கண் லென்ஸ்களில் வைட்டமின் சி அளவு குறையலாம், இது கண்பார்வையை பாதிக்கும். வெள்ளை பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் வைட்டமின் சி அதிலும் குறிப்பாக கண்களுக்கு கிடைக்கக்கூடிய வைட்டமின் சியின் அளவை அதிகரிக்கலாம்.

ரிபோஃப்ளேவின் குறைபாடு என்பது இரவில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு பாதிப்பாகும். வெள்ளைப் பூசணியில் போதுமான அளவு ரைபோஃப்ளேவின் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்க விரும்புபவர்கள், அவ்வப்போது வெள்ளைப்பூசணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி2 என அழைக்கப்படும், பற்றாக்குறையே பெரும்பாலான கண்பார்வை பிரச்சினைகளுக்கு முதன்மைக் காரணம். வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி2 அதிகமாக உள்ளது. அதை உண்ணும் தினத்தன்று, நமது தினசரி ஊட்டச்சத்து தேவைகளில் 11% விட்டமின் பி 2 சத்து கிடைத்துவிடும். இது கண் நோய்களின் அபாயத்தை எளிதில் குறைக்கும். 

மேலும் படிக்க | உடல் சூடு வதைக்கிறதா? அப்போ வெண் பூசணி சாப்பிடுங்க

ஆற்றலை அதிகரிக்கிறது
வைட்டமின் B2 உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு இன்றியமையாதது, இந்த உயிர்ச்சத்து, உண்ணும் உணவுகளை, நாம் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றுவதை உறுதி செய்கிறது. இதில் உள்ள அதிக வைட்டமின் B2 உள்ளடக்கம் ஹார்மோன் சமநிலையை ஆக்கப்பூர்வமாக ஊக்குவிக்கிறது. இது நாம் சரியாக செயல்படுவதற்கு அவசியம்.

மனச்சோர்வை நீக்கும் வெள்ளைப்பூசணி
மோனோஅமைன் ஆக்சிடேஸ் (MOA) என்சைம் பசி, மனநிலை, தூக்கம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. வெள்ளைப்பூசணிஒ, செரோடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் அளவை அதிகரிகப்பதால் மனச்சோர்வை கட்டுப்படுத்த வெள்ளைப்பூசணி உதவும்.  

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும் வெள்ளைப்பூசணி
வெள்ளைப்பூசணியில் உள்ள இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து அவசியம். எனவே, வெள்ளைப்பூசணியை வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது உட்கொள்வது இரத்த விருத்திக்கு உதவும். சாம்பல் பூசணி இரத்த சோகையைத் தடுக்கும் மற்றும் மூளைக்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் என்பதால், நினைவாற்றல் மற்றும் கவனத்தை குவிக்கும் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது ஒரு நபரின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! பாலுடன் தவறுதலாக கூட இவற்றை சாப்பிட வேண்டாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News