எடை இழப்புக்கான டிப்ஸ்: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக, பொதுவாக எடை வேகமாக அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.
தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினமான வேலை, இதற்கு கடுமையான உடற்பயிற்சிகளும் கடுமையான உணவுக் கட்டுப்பாடும் தேவை. இன்றைய பிஸியான வாழ்க்கையில், ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிட பலருக்கு நேரமிருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பல இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க குறைக்க நெய்யை பயன்படுத்தலாம். இதை கேட்டால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், நெய் என்ற பெயரை கேட்டாலே, இது எடையை அதிகரிக்கும் என்றுதான் தோன்றும். இதை வைத்து எப்படி எடையை கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழக்கூடும். தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் .உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
எடை இழப்புக்கு நெய்யின் பயன்பாடு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி இங்கே காணலாம்.
தொப்பையை குறைக்க நெய்யை எப்படி பயன்படுத்துவது?
1. வெதுவெதுப்பான நீருடன் நெய்யை உட்கொள்ளவும்
தொப்பையை குறைக்க நெய்யை பல வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் போதும். இது உங்கள் குடல்களின் இயக்கத்தை விரைவுபடுத்தி, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கும். இது செரிமான அமைப்பை விரைவுபடுத்துவதோடு, உங்கள் வயிற்றை எளிதில் சுத்தப்படுத்தி எடையைக் குறைக்க உதவும்.
மேலும் படிக்க | சிறுநீரக பலவீனம்! இந்த 7 குறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்!
2. பயத்தம் பருப்பு நீரில் நெய் கலந்து குடிக்கவும்
பயத்தம் பருப்பு நீர் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. பயத்தம் பருப்பு நீரில் நெய்யை கலந்து பின்னர் அதை குடிக்கவும். இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பயத்தம் பருப்பு நீர் வயிற்றை சுத்தம் செய்து மலம் மற்றும் சிறுநீருடன் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் வெளியேற்றுகிறது. இது தவிர, இது குடல் இயக்கத்தையும் எளிதாக்குகிறது. இது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.
எடை இழப்புக்கு நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நெய்யில் ஷார்ட் செயின் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் செரிமான செயல்முறையை விரைவுபடுத்துகிறது மற்றும் எடையைக் குறைக்கிறது. இந்த கூறுகள் வைட்டமின்கள் ஏ, ஈ, டி மற்றும் கே உள்ளிட்ட கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகின்றன மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது, இது கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எடை இழப்புக்கு உதவும் சில சிறந்த கார்போஹைட்ரேட் உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ