Uric Acid Control: இன்றைய நவீன வாழ்க்கை முறையில், பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றில் அதிக யூரிக் அமில அளவும் ஒன்றாகும். உடலில் பியூரின்கள் உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. இது ஒரு கழிவுப்பொருள் என்பதால், இது உடலை விட்டு அவ்வப்போது வெளியேறி விடுவது மிக அவசியமாகும். நாம் சிறுநீர் கழிக்கும் போது பொதுவாக யூரிக் அமிலம் உடலை விட்டு வெளியேறி விடுக்கின்றது. ஆனால், சில நேரங்களில், உடலில் உள்ள யூரிக் அமிலம் வெளியேறாமல், உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட இது காரணமாகின்றது. அதிக யூரிக் அமிலம் சிறுநீர கற்கள் மற்றும் மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கும் ஆபத்தானது. சிறுநீரகங்களால் உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போனால், அது இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு மூட்டுகளில் படிந்துவிடும். அதன் அதிகரிப்பு காரணமாக, எலும்புகள், மூட்டுகள் மற்றும் திசுக்களின் சேதம் அதிகரிக்கிறது.
யூரிக் அமிலத்தின் (Uric Acid) பெரும்பகுதி இரத்தத்தில் கரைந்து, சிறுநீரகங்கள் வழியாகச் சென்று சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. பியூரின் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் இரத்தத்தில் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன. பல இயற்கையான வழிக்களில் யூரிக் அமில அளவையும் மூட்டு வலியையும் கட்டுப்படுத்தலாம். யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் சில இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொத்தமல்லி
தினமும் கொத்தமல்லி (Coriander) சாப்பிட்டு வந்தால், உடலில் யூரிக் அமில அளவை எளிதாக குறைக்கலாம். கொத்தமல்லியின் பண்புகள் இரத்தத்தில் உள்ள கிரியேட்டின் மற்றும் யூரிக் அமில அளவைக் குறைக்கும் மந்திரமாக செயல்படுகின்றன. நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் நிறைந்த கொத்தமல்லியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் அதிகமாக உள்ளன. இவை இரண்டும் யூரிக் அமிலத்தைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கின்றன.
புரதச்சத்தைத் தவிர, கால்சியம், பொட்டாசியம், தயாமின், பாஸ்பரஸ் மற்றும் நியாசின் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. கொத்தமல்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து மருந்தாக அருந்தலாம். இதற்கு இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை போட்டு பத்து நிமிடம் கொதிக்க வைத்து பிறகு குடிக்கவும். இப்படி செய்து வந்தால், யூரிக் அமில அளவை வேகமாக குறைக்கலாம்.
மேலும் படிக்க | ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா... உடல் எடை குறைப்புக்கு கைக்கொடுக்கும்!
பிரிஞ்சி இலை
பிரியாணி இலை எனப்படும் பிரிஞ்சி இலை (Bay Leaves) சமையலறையில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. பிரிஞ்சி இலை யூரிக் அமிலத்தைக் குறைக்கும் மூலிகை மருந்தாகவும் பயன்படுகின்றது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகின்றது. பிரியாணி இலை அதிக யூரிக் அமிலத்தை குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறைந்தபட்சம் 15 பிரியாணி இலைகளை எடுத்து மூன்று கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு குடிக்கவும்.
வெற்றிலை
பொதுவாக நாம் விருந்து சாப்பாடு சாப்பிட்ட பிறகு வெற்றிலை (Betel Leaves) சாப்பிடுவது வழக்கம். வெற்றிலை செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல் பச்சை வெற்றிலை யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வெற்றிலை சாறு கொடுக்கப்பட்ட எலிகளின் யூரிக் அமில அளவு 8.09mg/dl இலிருந்து 2.02mg/dl ஆகக் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலை மூலம், யூரிக் அமில அளவை குறைக்க வெற்றிலையை மென்று சாப்பிடலாம். ஆனால் அதனுடன் எந்த விதமான புகையிலையையும் உட்கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை: கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ