புதுடெல்லி: நமது வாழ்க்கையில் முட்டை என்பது சுலபமாக கிடைக்கும் சத்து மிக்க உணவுப் பொருளாகும். இது சைவமா அசைவமா என்ற கேள்விகள் இருந்தாலும், இரண்டிலுமே வரும் என்று சொல்பவர்கள் இருந்தாலும், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், அனைவரின் உணவு திட்டத்திலும் பெரும்பாலும் முட்டை இடம்பெற்றுவிடுகிறது. உலகம் முழுவதும் முட்டை மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக இருப்பதற்கு காரணம், அதன் ஊட்டச்சத்து என்றால், சுலபமாக தயாரிக்கப்படும் உணவாகவும், அப்படியே பச்சையாக சாப்பிட்டாலும், ஆரோக்கியத்தை கூடாமல் குறையாமல் தரும் என்பதும் முட்டையின் சிறப்பாகும்.
மூளை ஆரோக்கியத்திற்கு முட்டை
அதிலும் குறிப்பாக, நமது வாழ்க்கையை திருப்திகரமாக வாழத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டை, மூளை ஆரோக்கியத்திற்கு கணிசமான பங்களிக்கிறது. மூளையின் செயல்பாட்டுக்கு முக்கியமானவையாகும். இது பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள முட்டை முழுமையான புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.
முட்டையின் ஊட்டச்சத்து
முட்டையில், வைட்டமின்கள் ஏ, பி2, பி5, பி6, பி12, D, E மற்றும் K மற்றும் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் உட்பட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் என பல்வேறு சத்துக்களை கொண்ட முட்டையின் விலை பிற சத்தான உணவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் குறைவானது.
ரத்த அணுக்களை கட்டமைக்கும் முட்டை
அதோடு, ரத்த அணுக்களை கட்டமைப்பது போன்ற உடலுக்கு மிகவும் தேவைப்படும் வைட்டமின் பி-9 எனும் ஃபோலிக் ஆசிட், மூளை ஆரோக்கியத்துக்கும், நரம்பியக்கடத்தி (neurotransmitter ) செயல்பாடுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. டிஎன்ஏ கட்டமைப்பு மற்றும் உயிரணுக்களில் நச்சு நீக்கப்படுவதற்கும் துணைபுரிகிறது, இந்த சத்து முட்டையில் இருக்கிறது என்பது முட்டையின் சிறப்பை மேலும் கூட்டுகிறது.
மேலும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு
முட்டை சாப்பிட உகந்த நேரம்
முட்டையின் அனைத்து ஊட்டச்சத்துக்களின் பலன்களையும் பூரணமாகப் பெற வேண்டும் என்றால், அதை சாப்பிட சரியான நேரம் எது, நேரத்தில் சாப்பிட்டால் முட்டையின் நன்மைகள் பன்மடங்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு காலை உணவாக முட்டை உண்பது நலம் பயக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
காலை உணவில் முட்டை
தினசரி பிஸியான வாழ்க்கையில், உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தாலும், முட்டைகள் சரியான காலை உணவு மெனுவாகும். முட்டையால் செய்யப்பட்ட உணவைத் தயாரிக்க 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இது துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது, அனைத்து புரதங்களிலும் மிக முக்கியமானது. புரோட்டீன் நிறைந்த காலை உணவு உங்களை நீண்ட நேரம் ஆற்றலுடன் இயங்க வைக்கும்.
உடற்பயிற்சிக்கு பிறகு முட்டை
புரதச் சத்து அதிகம் உள்ள முட்டை, உடற்பயிற்சிக்குப் பின்பு உண்பது நல்லது. ஏனென்றால், உடற்பயிற்சியில் நிறைய ஆற்றலை செலவு செய்த பிறகு முட்டை உண்பதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி ஆற்றலை வழங்குகிறது மற்றும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
ஓய்வெடுக்கும் கட்டத்தில் நம் உடல், தன்னைத்தானே சரிசெய்வதற்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவை, அதற்கு முட்டையை விட சிறந்தது எதுவுமில்லை. வேகவைத்த முட்டையுடன் கூடிய காலை உணவு எதுவாக இருந்தாலும், அது அந்த நாளை துவங்க உங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்கிவிடும்.
இரவில் முட்டை உண்பது சரியா?
இரவு உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால், தூக்கம் வருவதற்கு சற்று நேரம் ஆகலாம். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொழுப்புச்சத்து தூக்கத்தில் இடையூறு ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | முடி கொத்து கொத்தாக வளருமா? அப்போ இந்த ஹோம் மேட் டானிக் மட்டும் போதும்
இருப்பினும், வேறு சில ஆய்வுகளின்படி, இரவில் முட்டை சாப்பிடுவது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும். இரவில் முட்டை சாப்பிடும் போது, உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இரவில் வேகவைத்த முட்டை சாப்பிடலாம், இல்லையெனில் தவிர்ப்பது நல்லது.
ஆஃப் பாயில்ட் முட்டை
முட்டையை அதிகமாக சமைக்க வேண்டாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை அதிகமாக சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.
முட்டையை எப்படி சேமிப்பது?
முட்டைகளை தலைகீழாக சேமித்து வைப்பது நல்லது. உங்கள் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன் தலைகீழாக மாற்றினால் அவை நீண்ட காலம் நீடிக்கும். முட்டையின் கூர்மையான பகுதியை கீழே வைப்பது, ஷெல்லின் உள்ளே இருக்கும் காற்றுப் பைகள் மஞ்சள் கருவுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கும், இது முட்டையின் வாழ்நாளை அதிகரிக்கும்.
முட்டையின் நிறமும் ஊட்டச்சத்தும்
முட்டைகள் அனைத்தும் தொடக்கத்தில் வெள்ளை நிறத்ட்தில் இருக்கும். ஆனால் முட்டையின் இறுதி நிறத்தை மூன்று நிறமிகள் தீர்மானிக்கின்றன. வயதான கோழிகள் வெளிர் நிற முட்டைகளை இடுகின்றன.அதோடு, முட்டை ஓட்டின் நிறம் எதுவாக இருந்தாலும், அது ஊட்டச்சத்து மதிப்பை மாற்றாது என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உலகிலேயே முட்டை விலை அதிகமான நாடு எது தெரியுமா? அதிர வைக்கும் விலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ