நீரிழிவு நோயாளியா நீங்கள்? காலை உணவில் இவை கண்டிப்பாக வேண்டாம்

Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் காலை உனவு முதல் இரவு உணவு வரை தாங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் அதிகப்படியான கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 17, 2024, 05:39 PM IST
  • நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
  • நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
  • சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும்?
நீரிழிவு நோயாளியா நீங்கள்? காலை உணவில் இவை கண்டிப்பாக வேண்டாம் title=

Diabetes Control Tips: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்றைய அவசர உலகில் இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக மக்களுக்கு பல வித உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். 

நீரிழிவு நோயாளிகள் காலை உனவு முதல் இரவு உணவு வரை தாங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் அதிகப்படியான கவனத்துடன் உட்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் காலை உணவாக எண்ணெய் பதார்த்தங்களையும் ஹெவியான உணவுகளையும் உட்கொள்கிறார்கள். சிலர் காலை உணவில் அதிகபட்சமாக பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றையும் உட்கொள்கிறார்கள். ஆனால் இவை காலை உணவுக்கான ஆரோக்கியமான உணவுகள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும்? 

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் முழுமையாக கவனம் செலுத்தி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். காலையில் எண்ணெய் பதார்த்தங்களையும், பழங்கள் அல்லது பழச்சாறுகளை உட்கொண்டால் நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

பழங்கள், ப்ரெட், டோஸ்ட், பழச்சாறு, தேன், பிஸ்கட் போன்றவை நீரிழிவு நோயாளிகளின் காலை உணவுக்கு ஏற்றதல்ல என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும், ஆகையால் இவை காலை உணவில் தவிர்க்கப்பட வேண்டும்.

வெள்ளை ப்ரெட் 

வெள்ளை ப்ரெட் மிக அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதால், இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதில்லை. இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | கலோரிகளை எரித்து... உடல் பருமனை குறைக்கும் ‘சூப்பர்’ ஆயுர்வேத பொடி!

பழச்சாறுகள்

பழச்சாறுகளில் இயற்கையான சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன. எனினும், இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும்.

கார்ன் ஃப்ளேக்ஸ்

கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் நட் பார்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. இவை சர்க்கரை இல்லாத மற்றும் தினை சார்ந்த உணவுகள் என்று கூறப்படுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட உணவுகளின் லேபிள்களையும் சரிபார்கக் வேண்டும். சுகர் ஃப்ரீ என்று இருந்தாலும் இவற்றில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாகத்தான் இருக்கின்றது. 

அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளை குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இவை திடீரென உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது உடலில் இரத்த சர்கரை அளவு கட்டுப்பாட்டை சீர்குலைக்கும். 

சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்? 

நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சர்க்கரை மற்றும் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். உலர் பழங்கள், இயற்கை சர்க்கரை இல்லாத காய்கள், விதைகள், முளை கட்டிய பயறுகள். இட்லி, ஓட்ஸ், ஆகியவை சிறந்த தேர்வுகளாக கருதப்படுகின்றன. 

மேலும் படிக்க | யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News