தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6, கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் உள்ளதால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதற்கான சிறந்த பானமாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிப்பதால், அன்றைய நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தேவையான சத்துகள் கிடைக்கின்றன. இது தவிர, தக்காளி சாற்றில் 95% தண்ணீர் சத்தும் உள்ளது.
தக்காளி ஜூஸ் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில், தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.
புற்றுநோய் அபாயம் குறையும்
உடலில் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் லைகோபீன் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் தக்காளியில் உள்ளது. எனவே, தக்காளி ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். குறிப்பாக லைகோபீன் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
தக்காளி ஜூஸ் இதயத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாஷியம் சத்து அவசியம். தக்காளி ஜூஸை தொடர்ந்து குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை (Heart Health) கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இதன் மூல, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் அபாயத்தையும் பக்கவாதாம் ஏற்படும் ஆபத்தையும் பெருமளவு குறைக்கலாம்.
உடல் பருமன் குறையும்
உடல் பருமனை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு, தக்காளி ஜூஸ் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் குறைவான அளவு கலோரிகளின் உள்ளது. அதே நேரத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது தவிர, தக்காளி சாறு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் பருமன் குறைய வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் அடிக்கடி படி எடுக்காமல் பசி கட்டுப்படுத்தப்படும்.
மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென குறைய... காலை உணவில் சாப்பிட வேண்டியதும்... சாப்பிடக் கூடாததும்
இளமையை காக்கும் தக்காளி ஜூஸ்
நீண்ட நாட்களுக்கு இளைமையாக இருக்க விரும்புபவர்கள், தக்காளி ஜூஸை கட்டாயம் டயட்டில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இது, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு, மாசு மரு இல்லாத அழகான சருமத்தை பெற மிகவும் உதவும். இது சருமத்தில் நீர்சத்தை பாதுகாத்து, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முதுமையின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜூஸ் குடிப்பதால் முகப்பரு போன்ற பிரச்சனைகளும் குறையும்.
செரிமானத்தை வலுப்படுத்தும் தக்காளி ஜூஸ்
தக்காளியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, தக்காளி ஜூஸ் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஜீரண சக்தி வலுவடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும்.... ஆபத்தான அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ