உலகின் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -WHO கவலை

தொற்றுநோய் பரவுவது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வழிகள் உள்ளன. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 6, 2020, 06:20 PM IST
  • உலகில் ஒவ்வொரு 10 பேரில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று: WHO
  • எதிர்காலத்தில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்.
  • உலகின் 10 சதவீத மக்கள் கொரோனா வைரசுக்கு இரையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது
  • உலகளவில் 37 மில்லியன் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. இவர்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.
உலகின் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -WHO கவலை

Coronavirus in World News: உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) திங்களன்று தனது ஒரு அறிக்கையில், உலகில் ஒவ்வொரு 10 பேரில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று கூறியுள்ளது. WHO இன் இந்த அறிக்கை உங்களை அதிர்ச்சி அடைய வைக்கலாம். வரும் நாட்களில் மேலும் இந்த நோய் தொற்று அதிகமாக பரவும்,  அதாவது உலக முழுவதும் வரும் காலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை என்பது, COVID-19 தொற்று ஏற்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

இது தவிர, எதிர்காலத்தில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

இதுக்குறித்து பேசிய WHO இன் தலைவர் டாக்டர் மைக்கேல் ரியான் (Dr. Michael Ryan), "கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்கள் கிராமத்திற்கு நகரத்திற்கு மாறுபடலாம். வெவ்வேறு வயதினராக இருக்கலாம். ஆனால் உலக மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இந்த நோயின் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என்றார்.

தொற்றுநோய் பரவுவது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றார். இருப்பினும், தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வழிகள் உள்ளன. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.

ALSO READ |  நடிகை தமன்னாவுக்கு கொரோனா- மருத்துவமனையில் அனுமதி

தென்கிழக்கு ஆசியாவில் (South-East Asia) கொரோனோ வைரஸ் காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று டாக்டர் ரியான் கூறினார். ஐரோப்பாவிலும் மேற்கு மற்றும் மத்திய கடலிலும் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளின் நிலைமை நோய் பரவுவதற்கு மிகவும் சாதகமாக இருக்கிறது என்றார்.

மேலும் கூறிய டாக்டர் ரியான், "எங்கள் சமீபத்திய மதிப்பீடு படி, உலகின் 10 சதவீத மக்கள் கொரோனா வைரசுக்கு இரையாகிவிட்டதாக கூறுகிறது. அதாவது, உலகின் சுமார் 760 கோடி மக்கள் தொகையில், 76 கோடி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம். கொரோனா வைரஸ் இன்னும் உலகின் பல பகுதிகளில் பரவி வருகிறது என்றார்.

ALSO READ |  அதிபர் ட்ரம்ப் ஆபத்தான நிலையில் உள்ளாரா... வெள்ளை மாளிகை கூறுவது என்ன..!!!

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் 37 மில்லியன் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. இவர்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் (COVID-19 in India) பெரும்பாலான தொற்று பதிவாகியுள்ளன. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் முறையே 76 லட்சம் மற்றும் 66 லட்சம் பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More Stories

Trending News