Weight Loss Tips: உடல் பயிற்சி இல்லாமலேயே எளிதாக உடல் எடையை குறைக்கலாம்..!!

உடலில் கூடிய எடையை குறைப்பது என்பது பெரிய சவாலான காரியம் தான். எடை இழப்பு என்பது கடினமானது என்றாலும், அது முடியாத காரியம் அல்ல. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2021, 02:32 PM IST
Weight Loss Tips: உடல் பயிற்சி இல்லாமலேயே எளிதாக உடல் எடையை குறைக்கலாம்..!! title=

உடலில் கூடிய எடையை குறைப்பது (Weight Loss) என்பது பெரிய சவாலான காரியம் தான். எடை இழப்பு என்பது கடினமானது என்றாலும், அது முடியாத காரியம் அல்ல. சில எளிமையான, அதே சமயம் ஸ்மார்ட்டான வழியில் உடல் எடையை  எளிதாக குறைக்கலாம்

நீங்கள் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்கள், முடியாதவர்கள் அல்லது நேரம் இல்லாதவர்கள், நமது தினசரி நடவடிக்கைகளில் சிறிய மாற்றங்கள் நல்ல பலனை தரும்.  அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் இந்த சிறிய மாற்றங்களை நீண்ட கால அடிப்படையில்  கடைபிடித்தால், வியக்கத்தக்க பலன்களை பெறலாம்.

 கலோரிகளை எரிக்க அனைத்து வழிகளையும் பின்பற்றவும். அது வெறும் 15 நிமிடங்களாக இருந்தாலும், எழுந்து நடக்கத் தொடங்குங்கள். மெட்ரோவிலிருந்து உங்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள், லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்லுங்கள். உங்களால் முடிந்தவரை கலோரிகளை எரிக்க ஒரு எளிய வழியைக் கண்டறியவும். 

ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!

15 நிமிடங்கள் நடப்பது 120 கலோரிகளை எரிக்க உதவும் என்பதால், நீங்கள் தொடர்ந்து நடக்கவில்லை என்றாலும், அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நடந்தால், அதற்கான பலனும் நிச்சயம் கிடைக்கும். அதனால்,நடப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளவும்

 உணவில் ஆரோக்கியமான எண்னெய் வகைகளை சேர்க்கவும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்க்கு மாறுவது  சிறந்தது, அடுத்ததாக நினைவில் கொள்ள வேண்டியது உங்கள் உணவுகளில், எந்த எண்ணெய் ஆனாலும் ஒன்றுக்கு மேற்பட்ட தேக்கரண்டி எண்ணெயைச் சேர்ப்பதை தவிர்ப்பது. 

உணவுல் சாதம் மற்றும், கோதுமையின் அளவை குறைத்து, அதற்கு பதிலாக சிறு தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுதல் சிறந்த பலன் கொடுக்கும். 

இது தவிர, வெந்நீர் அருந்துவதும் நல்ல பலனை தரும், எப்போதும் வெந்நீர் அருந்துதல் உங்கள் மெடாபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். 

ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News