தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பலதரப்பினர் கண்டனத்தை தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைணம் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. விசாரணையையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்துள்ளனர்.
Tamil Nadu: Team of National Human Rights Commission (NHRC) visited #Thoothukudi & met District Collector and the families affected due to the firing during #SterliteProtests. Later, the team also visited the General Hospital to meet the injured. pic.twitter.com/B8gOvEOAPp
— ANI (@ANI) June 3, 2018