தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா-வின் தடை நீக்கப்பட்டது!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காகிஷோ ரபாடாவிற்கு ICC-ஆல் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது!

Last Updated : Mar 20, 2018, 08:49 PM IST
தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா-வின் தடை நீக்கப்பட்டது! title=

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காகிஷோ ரபாடாவிற்கு ICC-ஆல் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் அவரின் தோள்பட்டையை இடித்தவாறு சென்றார் ரபாடா. 

இதைத்தொடர்ந்து ரபாடாவிற்கு, ICC விதிமுறை லெவல் II -ன்படி 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் இவருக்கு இரண்டு டெஸ்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து ரபாடே மேல்முறையீடு செய்தார். நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரான் என்ற நிதி கமி‌ஷனர் இதுகுறித்து நேற்று விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணையில் சுமார் 6 மணி நேரம் தனது வாதத்தை ரபாடா எடுத்து வைத்தார்.

இந்த விசாரணை முடிவில் ரபாடாவின் குற்றம், லெவல் II-ன் கீழ் வராது எனவும். லெவல் I-ன் கீழ்தான் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே டிமெரிட் புள்ளி 3-ல் இருந்து 1-ஆக குறைக்கப்பட்டது. இதனால் 7 புள்ளிகள் பெற்றிருக்கும் ராபாடா வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News