13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; சகோதரி உட்பட 7 பேர் கைது

Lakhimpur Kheri: உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கரும்பு தோட்டத்தில், 13 வயது சிறுமி  கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2022, 11:38 AM IST
  • 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்
  • லக்கிம்பூர் கேரியில் கொலை
  • மூத்த சகோதரி உட்பட ஏழு பேர் கைது
13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; சகோதரி உட்பட 7 பேர் கைது title=

லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் செவ்வாயன்று 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியது. இந்த கொலைக்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, விசாரித்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம், புதன்கிழமையன்று போலீசார், வெளியிட்ட தகவலின் படி இந்த விவரகாரத்தில் உயிரிழந்த சிறுமியின் உடன் பிறந்த சகோதரி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் குற்றம் சாட்டப்பட்ட சகோதரி மற்ற குற்றவாளிகளுடன் தாகாத உறவு வைத்துக்கொண்டு தன் தங்கையிடம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது.

சதார் கோட்வாலி பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவதிற்கு பிறகு, கொலை வழக்கில் போலீசார் விரைவான விசாரணையில் புதன்கிழமை வெளிப்படுத்தினர். காவல் துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் கூறுகையில், உடனடியாக நாய் படை, தடயவியல் குழு மற்றும் பிற குழுக்கள் குவிக்கப்பட்டன. சிறுமியை 4 பேர் பாலியல் தொல்லை செய்தனர். அப்போது அவரது மூத்த சகோதரியும் இதில் உடன் இருந்துள்ளார். வயல் வெளியில் இரண்டு பேர் காவலுக்கு நின்றிருந்தனர். பின்னர் அந்த சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | குவாண்டம் சீட்ஸ் வாயுக் கசிவு: அம்மோனிய வாயுவை சுவாதித்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள்

மேலும் கூறிய அவர், அவரது மூத்த சகோதரி கிராமத்தில் உள்ள 5 பேருடன் தொடர்பு வைத்திருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறினார். இது தெரிந்த தன் தங்கை தினமும் அவரை கண்டித்துள்ளார். தங்கையின் கண்டிப்பால் கோபமடைந்த அக்கா ரஜினி, தங்கையை தன்னுடன் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவருடைய கூட்டாளிகள் அந்த சிறுமியை பிடித்து, கூட்டு பலாத்காரம் செய்தனர் என்றார். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அவரது சகோதரி என்று எஸ்பி தெரிவித்தார். அத்துடன் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் சவுகான், அமர் சிங், அங்கித், சந்தீப் சவுகான், தீபு சவுகான், அர்ஜுன் மற்றும் சகோதரி ரஜினி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் இந்த வழக்கை தீர்த்து வைக்கும் போலீஸ் குழுவுக்கு ரூபாய் 20,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என எஸ்பி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஒருநாள், டி20 போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த பாகிஸ்தான் வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News