இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளனர்.   

Last Updated : Mar 10, 2018, 03:17 PM IST
இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து! title=

இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளனர்.


இந்தியா வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
உலக தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் இமானுவேல் மேக்ரன். கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸின் அதிபராக பதவியேற்று கொண்டார்.
 
இந்நிலையில், 4 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் இன்று இந்தியா வந்துள்ளார். தனது மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ் உடன் டெல்லி விமான நிலையம் வந்த மேக்ரனை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.  பின்னர் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு ஜனாதிபதி மாளிகையில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற வீரர்கள் அணி வகுப்பு மரியாதையை இம்மானுவேல் மெக்ரான் ஏற்றுக்கொண்டார். 
 
இதையடுத்து, இந்தியா வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த சந்திப்பில் போது இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிரான்சு அதிபர் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசுகிறார். 
 
இதையடுத்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதன் பின்னர், இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி- இம்மானுவேல் மெக்ரான் ஆகிய இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்துகின்றனர். 
 
இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளனர். இருநாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பின் போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவியேற்ற பின்னர் இம்மானுவல் மெக்ரான் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், மேக்ரனை இந்தியாவுக்கு வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டரில் ஏற்கனவே பதிவிட்டுள்ளதாவது, "இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். உங்களது வருகை இருநாடுகள் இடையிலான நட்புக்கு கூடுதல் வலுசேர்க்கும். நாளை நம் இருவர் இடையேயான பேச்சுவார்த்தையை எதிர்ப்பார்க்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
 
இதை தொடர்ந்து, தனது மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ் உடன் டெல்லி விமான நிலையம் வந்த மேக்ரனை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் இந்தியா வந்த போது, அவரை மோடி நேரில் சென்று வரவேற்காதது சர்ச்சையான நிலையில், தற்போது மேக்ரனை நேரில் சென்று வரவேற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Trending News