மும்பையிலிருந்து 1600 KM நடந்து சென்று கிராமத்தை அடைந்த இளைஞர்.. 4 மணி நேரத்தில் மரணம்

கிராமத்தை அடைந்த பின்னர், அந்த இளைஞன் ஒரு அரசு பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டார். அங்கு அவர் 4 மணி நேரம் கழித்து இறந்தார் என்று கூறப்படுகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2020, 07:55 PM IST
மும்பையிலிருந்து 1600 KM நடந்து சென்று கிராமத்தை அடைந்த இளைஞர்.. 4 மணி நேரத்தில் மரணம் title=

கொரோனா மரணம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலைக் காரணமாக மும்பையில் சிக்கிய ஒரு இளைஞர், சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காமல் சிரமப்படத் தொடங்கியபோது, ​​அந்த இளைஞர் தனது கிராமத்தை நோக்கி செல்லத் தீர்மானித்தார். முழு ஊரடங்கு காரணமாக கிராமத்திற்கு செல்ல எந்த வழியையும் இல்லாதபோது, ​​அவர் கிராமத்திற்கு கால்நடையாக செல்லத் தொடங்கினார்.

ஸ்ராவஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், 1600 கி.மீ தூரம் நடந்து கிராமத்தை அடைந்த இளைஞரின் வாழ்க்கையில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அவர் வீட்டை அடைந்து சற்று நேரத்தில் இறந்தார். அவரின் இறப்பால் அவரது குடும்ப உறுப்பினர்கள் சோகமாக உள்ளனர்.

கிராமத்தை அடைந்த பின்னர், அந்த இளைஞன் ஒரு அரசு பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டார். அங்கு அவர் 4 மணி நேரம் கழித்து இறந்தார் என்று கூறப்படுகிறது. தனிமைப் படுத்தப்பட்ட இளைஞர்களின் மரணத்திற்குப் பிறகு நிர்வாகத்தில் ஒரு பீதி ஏற்பட்டது. மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியாததால், விழிப்புணர்வைக் கருத்தில் கொண்டு நிர்வாகம் கோவிட் -19 ஐ விசாரணைக்கு அனுப்பியுள்ளது. மேலும், அறிக்கை வரும் வரை, அவரது உடல் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.

கிராமத்தை அடைந்து நான்கு மணி நேரம் கழித்து மரணம்:
மட்கன்வா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் காலை ஏழு மணியளவில் தனது கிராமத்திற்கு கால்நடையாக வந்து சேர்ந்தார். பின்னர் அவர் உடனடியாக மட்கன்வா தொடக்கப் பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டார். சுமார் 10:30 மணியளவில், வயிற்று வலி காரணமாக வயிற்றுப்போக்கு வாந்தியெடுக்கத் தொடங்கினார். இளைஞரின் உடல்நிலை மோசமடைவது குறித்து கிராமச் செயலாளர் டாக்டருக்கு தகவல் கொடுத்தார். அந்த பள்ளியை ஆம்புலன்ஸ்‌ அடைந்த நேரத்தில், அந்த இளைஞர் இறந்தார்.

அவரின் மாதிரி விசாரணைக்கு அனுப்பப்பட்டது:
இந்த சம்பவம் குறித்து நிர்வாகம் அறிந்ததும், சி.எம்.ஓ டாக்டர் சக ஊழியர்களுடன் தனிமைப் படுத்தப்பட்ட இடத்தை அடைந்தார். இறந்தவரின் கோவிட் -19 மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சி.எம்.ஓ தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வந்த பிறகு, அவருடன் தொடர்பு கொண்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் பள்ளியிலேயே தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் பின்னர் அவர் இறப்புக்கு காரணம் என்ன என்று முடிவு செய்யப்படும்.

Trending News