வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு வார்டு பாய் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றசாட்டு..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 09:07 AM IST
வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..! title=

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு வார்டு பாய் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றசாட்டு..!

உத்தரபிரதேச மொராதாபாத்தில் (Moradabad) பணியாற்றி வந்த சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) எடுத்துக்கொண்ட பின் உயிரிழந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையின் வார்டு பாய் (Ward Boy) மஹிபால் சிங் என்பவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. 

உடல்நலம் மோசமடைவதால் மரணம்

கொரோனா தடுப்பூசிக்குப் (Covid-19 Vaccine) பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது என்று மகிபால் சிங்கின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் சிகித்சை பயன் இன்றி இறந்தார். அவர் ஒருபோதும் COVID -19 நோயால் பாதிக்கப்படவில்லை என்றும், தேசிய தடுப்பூசி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியை (CMO) மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகையில், 'வார்டு பாய் மஹிபாலுக்கு கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் வழங்கப்பட்டது. ஒரு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை, அவருக்கு மார்பு வலியால் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மேலும் கூறுகையில், 'வார்டு பாய் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் இரவு ஷிப்டில் (Night Shift) பணிபுரிந்தார். மேலும், தடுப்பூசியின் எந்த பக்க விளைவுகளும் மரணத்தால் விளைந்தன என்று நாங்கள் நினைக்கவில்லை. மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய நாங்கள் விசாரித்து வருகிறோம்.

ALSO READ | COVID Vaccination Drive இந்த மாநிலங்களில் நிறுத்தப்பட்டது: காரணம் இதுதான்

தடுப்பூசி போட்ட பிறகு உடல்நிலை மோசமடைந்தது 

மஹிபாலின் மகன் விஷால், 'தடுப்பூசி போட்டபின் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அவர் வீட்டிற்கு திரும்பி வர மதியம் என்னை மருத்துவமனைக்கு அழைத்து, தன்னால் பைக்கை ஓட்ட முடியாது என்பதால் ஒரு ஆட்டோவைக் கொண்டு வரச் சொன்னார். நான் மதியம் 1.30 மணிக்கு மருத்துவமனையை அடைந்தேன், ஏற்கனவே அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் நினைத்தேன். இதன் பின்னர், அவரை வீட்டிற்கு அழைத்து வந்து, தேநீர் அருந்திய பிறகு ஓய்வெடுக்கச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் அவர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்" என அவர் கூறினார். 

2 நாட்களில் நாடு முழுவதும் 2.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தின் இரண்டு நாட்களில், நாட்டில் 2.24 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை 2,07,229 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி தெரிவித்தார். இது ஒரு நாட்டில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஆறு மாநிலங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டன, 553 அமர்வுகளில் மொத்தம் 17,072 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசியின் பாதகமான விளைவு 447 பேர் மீது காட்டப்பட்டுள்ளது

2 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் 447 பாதகமான பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 447 வழக்குகளில், மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில் இருவர் வடக்கு ரயில்வே மருத்துவமனை மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ரிஷிகேஷ் எய்ம்ஸில் கண்காணிப்பில் உள்ளார் மற்றும் பொருத்தமான நிலையில் உள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News