கேரளாவில் மேலும் 6 கொரோனா வழக்கு; இந்தியாவில் மொத்தம் 53!

கேரளாவில் ஆறு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 12-ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று தெரிவித்தார்.

Last Updated : Mar 10, 2020, 04:03 PM IST
கேரளாவில் மேலும் 6 கொரோனா வழக்கு; இந்தியாவில் மொத்தம் 53! title=

கேரளாவில் ஆறு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 12-ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று தெரிவித்தார்.

12 பேரில் ஒன்பது பேர் பதனம்திட்டாவிலும், இரண்டு கோட்டையத்திலும், ஒருவர் கொச்சியிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்த அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

கேரளாவின் சுகாதார மந்திரி கே.கே.ஷைலாஜா, கொச்சியில் மூன்று வயது குழந்தையைத் தவிர, அனைத்து Covid-19 நோயாளிகளும் இத்தாலியில் இருந்து வந்த மூன்று நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் திரும்பி வருவது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். முதல்வர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் அவரும் கலந்து கொண்டு இத்தகவலை வெளியிட்டார்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பொது நிகழ்வுகளையும் ரத்து செய்வது, சில வகுப்புகளை ஒரு மாதத்திற்கு மூடுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு கையில் எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் மாநிலத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) ஆகியவை) விடுமுறை அறிவித்துள்ளது.

இருப்பினும், 8 முதல் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், கண்காணிப்பில் உள்ள மாணவர்கள், ஒரு சிறப்பு அறையில் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கேரளா அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் அனைத்து கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் பயிற்சிகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என்று முதல்வர் கூறினார்.

மேலும் திரையரங்குகள் தங்களது திரைப்படத் திரையிடல்களை தற்போதைக்கு நிறுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது மக்கள் நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் போன்ற அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சடங்குகளை வீட்டிலேயே மட்டுப்படுத்திக் கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேப்போல், வியாழக்கிழமை மாதாந்திர பூஜைகளுக்கு திறக்கும் சபரிமலை சன்னதிக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் பரிந்துரைத்தார்.

மாநிலத்தில் இருந்து ஆறு வழக்குகள் பதிவாகிய பின்னர் திங்களன்று கொரோனா வைரஸ் பரவுவதற்கான முயற்சிகளை கேரளா ஏற்கனவே பலப்படுத்தியிருந்தது.

முன்னதாக இந்தியாவின் முதல் மூன்று நேர்மறையான வழக்குகள், கேரளாவிலிருந்து தெரிவிக்கப்பட்டன, எனினும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News