நாடு தழுவிய முழு அடைப்பின் போது அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக, கிழக்கு மத்திய ரயில்வேயில் இருந்து சரக்கு ரயில்களின் செயல்பாடு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 25 முதல் 27 வரையிலான மூன்று நாட்களில், கிழக்கு மத்திய ரயில்வேயில் இருந்து மட்டும் 722 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் கிழக்கு மத்திய ரயிலின் வெவ்வேறு முனையங்களில் இருந்து 220 ரேக்குகள் ஏற்றப்பட்டு 55 ரேக்குகள் இறக்கப்பட்டன எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
READ | COVID-19 சந்தேக நபர்களைக் கண்டறிய இந்திய ரயில்வே புதிய திட்டம்..!
இதில், பொது மக்களின் அன்றாட தேவைகள், 194 ரேக் நிலக்கரி மற்றும் 9 ரேக்குகள் பல்வேறு பொருட்களுடன் தொடர்புடைய 17 ரேக் பொருட்கள் உட்பட மொத்தம் 220 ரேக்குகள் ஏற்றப்பட்டன. இதனுடன், 5 ரேக் உணவுப் பொருட்கள், 38 ரேக் நிலக்கரி, 1 ரேக் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் 11 ரேக் அரிசி, உப்பு உள்ளிட்ட மொத்தம் 55 ரேக்குகள் இறக்கப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் முயற்சியில் மே 3 வரை நாடு முழுவதும் முழு அடைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
READ | சரக்கு ரயில்களை காலிசெய்யுமாறு சிமென்ட் கம்பெனிகளை எச்சரிக்கும் இந்தியன் ரயில்வே...
இந்த நேரத்தில், கோதுமை, அரிசி, உப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களும் கிடைப்பதில் பொது மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக முன்னுரிமைடன் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனுடன், சிறு வணிகர்களின் வசதிக்காக, நேர அட்டவணையை அடிப்படையாகக் கொண்ட பார்சல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.