ராய்பூர்: சத்தீஷ்கரின் சுக்மா பகுதியில், மாவோயிஸ்டகள் வைத்த வெடிகுண்டில் சிக்கி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் பலியாகினர்!
ராய்ப்பூர் நகரிலிருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுக்மாவிலுள்ள கஸ்திராம் பகுதியிலுள்ள காட்டில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது!
இச்சம்பவம் குறித்து சிறப்பு டிஜி அதிகாரி அஸ்வதி தெரிவிக்கையில், "மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் வாகனத்தினை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான கூடதல் மீட்பு படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மாவோயிஸ்ட்டுகள் தங்களது பாதுகாப்பு வாகனத்தினை(MPV) முடக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SpotVisuals from the site of IED blast by Naxals in Kistaram area of #Chhattisgarh's Sukma, 9 CRPF personnel have lost their lives. pic.twitter.com/iN4bQCETHH
— ANI (@ANI) March 13, 2018
இச்சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரது நிலைமை கவலைகிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
MPV ஐ தாக்க பல வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தகவலறிந்ததும் சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிகப்பட்ட வீரர்களை மீட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்!