முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த 13 பேரின் உடல்களை சுமந்து கொண்டு, சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் டெல்லி புறப்பட்டது.
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி உட்பட 14 பேர் எம்.ஐ. 17வி ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மேக மூட்டத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின் தமிழக அரசின் (TN Government) அமரர் ஊர்தியில் தனித்தனியாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. வரும் வழியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்ட அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே திடீரென விபத்துக்குள்ளாகியது.
பின்னர் மற்றொரு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியது.
பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு பின் ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு 2.55 மணி அளவில் கொண்டு வரப்பட்டன. சாலை வழியாக கொண்டுவரப்பட்ட உடலுக்கு ஏரளமான பொதுமக்கள் திரண்டு மலர்தூவி அஞ்சலி செய்தனர்.
#WATCH| Tamil Nadu: Locals shower flower petals & chant 'Bharat Mata ki Jai' as ambulances carrying mortal remains of CDS Gen Rawat, his wife & other personnel who died in Coonoor military chopper crash, arrive at Sulur airbase from Madras Regimental Centre in Nilgiris district pic.twitter.com/fhVIDaf5FL
— ANI (@ANI) December 9, 2021
இதன் பின்னர் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானபப்டை விமான தளத்தில் இருந்து சி 130சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியன.
ALSO READ | Live: CDS ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிப் பயணம்
ALSO READ | CDS Bipin Rawat: இறுதிப் பயணத்திற்கு தயாராகிறார் இரும்பு மனிதர் பிபின் ராவத்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR