நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் :ஆர்எஸ்எஸ் தலைவர்

நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2018, 08:23 PM IST
நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் :ஆர்எஸ்எஸ் தலைவர் title=

டெல்லியில் மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்றுவருகிறது. மூன்றாவது நாளான இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், "நமது நாடு ஓர் இந்து தேசம், இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள்" என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, 

இந்துத்துவம் என்றால் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது அர்த்தமில்லை. இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். இந்துத்துவம் என்பது இஸ்லாமியர்களை உள்ளடக்கியது. நம் நாட்டில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள். இந்துத்வா அனைவரையும் ஒன்றுபடுத்துகிறது. இஸ்லாமியர்கள் வேண்டாம் என்று கூறுவது என்பது இந்துத்துவா இல்லை என்று பொருள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மனசாட்சிக்கு உண்மையாக இருக்கிறது. சகோதரத்துவம் குறித்து பேசுகிறது. 

சட்ட வரைவு 370 மற்றும் 35A குறித்து விவகாரம் குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன், ஆனால் அந்த சட்டத்தை நான் ஒத்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாநாட்டில், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இஸ்லாமியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News